வடிவீஸ்வரம் அழகம்மன் கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் 

வடிவீஸ்வரம் அழகம்மன் கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் 


நாகர்கோவில் வடிவீஸ்வரம் அழகம்மன் கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.


நாகர்கோவில் வடிவீஸ்வரம் அழகம்மன் கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

குமரி மாவட்டம் நாகர்கோவில், வடிவீஸ்வரம் அழகம்மன் சமேத ஸ்ரீ சுந்தரேஸ்வரர் திருக்கோயில் மாசிப் பெருந்திருவிழா திருக்கொடியேற்றத்துடன் தொடங்கியது. இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசிப் பெருந்திருவிழா 10 நாள்கள் வெகு விமரிசையாக நடைபெறும்.

இந்த ஆண்டு திருவிழா பிப்.15 ஆம் தேதி (இன்று) காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை முன்னிட்டு காலை 5.30 மணிக்கு கணபதி ஹோமம் நடைபெற்றது. ஹோமத்தை தந்திரி கே.ஜி.எஸ்.மணி நம்பியார் நடத்தினார். தொடர்ந்து காலை 8.30 மணிக்கு திருக்கொடியேற்றம் நடைபெற்றது.

கொடி மரத்துக்கு பால்,பன்னீர்,கம்பம், சந்தனம், இளநீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடத்தப்பட்டு, சோடஷ தீபாராதனை நடைபெற்றது. ஓதுவார் ஆர்.செல்வமணி தேவார திருமுறைகள் ஓதினார். நிகழ்ச்சியில், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ், அறங்காவலர் குழு தலைவர் பிரபா ஜி.ராமகிருஷ்ணன், அருள்மிகு அழகம்மன் சமேத சுந்தரேஸ்வரர் வழிபாட்டு அறக்கட்டளை தலைவர் நாகராஜன் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர். இவ்விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 9 ஆம் திருவிழாவான பிப்.23ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது.

Tags

Next Story