திருப்பத்தூரில் வைரலாகும் வடிவேலு போர்டு: கவுன்சிலர் குசும்பு
திருப்பத்தூரில் 4வது வார்டில் குப்பை கொட்ட நீயும் வரக்கூடாது நானும் வரமாட்டேன் என வடிவேல் புகைப்படத்துடன் போர்டு வைத்த கவுன்சிலரின் குசும்பு.
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் 4வது வார்டில் குப்பை கொட்ட நீயும் வரக்கூடாது நானும் வரமாட்டேன் என வடிவேல் புகைப்படத்துடன் போர்டு வைத்த திருப்பத்தூர் நாலாவது வார்டு கவுன்சிலரின் குசும்பு திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன.
இதில் நாலாவது வார்டு கவுன்சிலராக கௌரி ஐயப்பன் உள்ளார் இந்த நிலையில் நாலாவது வார்டில் அனைவரையும் கவரும் வண்ணம் ஒரு போர்டு வைத்துள்ளார். அதில் திருப்பத்தூர் நகராட்சி இந்த இடத்தில குப்பை கொட்ட நீயும் வர கூடாது நானும் வரமாட்டேன் இப்படிக்கு திருப்பத்தூர் நாலாவது வார்டு என பொதுமக்களுக்கு சுத்தம் குறித்து விழிப்புணர் ஏற்படுத்தும் வகையில்,
இந்த போர்டை வைத்து அதில் வடிவேல் புகைப்படத்தையும் வைத்துள்ளனர். இந்த போர்டு அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story