ராமநாதபுரம் வந்தடைந்த வைகை நீர்

ராமநாதபுரம் வந்தடைந்த வைகை நீர்

வைகை நீர்

ராமநாதபுரம் மாவட்ட விவசாய பாசனத்திற்காக வைகையில் திறந்து விடப்பட்ட தண்ணீர் இராமநாதபுரம் பெரியகண்மாய் கடைமடையை வந்தடைந்தது.
வைகை அணையில் இருந்து ஆயக்கட்டுகார்கள் உரிமையின் அடிப்படையில் ராமநாதபுரம் மாவட்டத்தின் விவசாயத்திற்காக கடந்த 23ம் தேதி வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. 23ம் தேதி முதல் 29ம் தேதி வரை 1504 மில்லியன் கனஅடி தண்ணீரினை படிப்படியாக திறந்து விட உத்தரவு இட்டதின் அடிப்படையில் வைகை ஆற்றிலிருந்து தண்ணீர் 25ம் தேதி பார்த்திபனூர் மதகணையை வந்தடைந்ததையொட்டி 1 வினாடிக்கு 4000 கன அடி வீதம் தண்ணீர், பார்த்திபனூர் மதகணையில் இருந்து இராமநாதபுரம் பெரியகண்மாய் வரை உள்ள முறைபாசன கண்மாய்களுக்கு பாசன வசதி செய்யும் பொருட்டு இடதுபுறம் மற்றும் வலதுபுறம் கால்வாய் மூலமாக தண்ணீர் வழங்கப்பட்டுள்ளது. இதனால் 67837 ஏக்கர் பாசனப்பரப்பு நிலங்கள் பயன்பெரும். இந்நிலையில் இன்று இாமநாதபுரம் அருகே ஆர்.காவனூர் அடுத்த காருகுடி தெத்திற்கு 1000 கன அடி தண்ணீர் வந்தது. இந்த தண்ணீர் அப்படியே முழுமையாக இராமநாதபுரம் பெரிய கண்மாய்க்கு திறந்து விடப்பட்டு கடைமடையை வந்ததடைந்தது. வைகை தண்ணீரை கடலுக்கு விடாமல் சேமித்து விவசாயத்திற்கு பயன்படுத்த மாவட்ட நிர்வாகம் உதவி செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story