மதூர் ராம பக்த ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜை

மதூர் ராம பக்த ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜை

திருவிழா

மதுார் கிராமத்தில் உள்ள ,ராம பக்த ஆஞ்சநேயர் கோவிலில், வைகாசி மாத திருவிழா நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியம், மதுார் கிராமத்தில், ஏரிக்கரை அருகே, ராம பக்த ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டுதோறும் வைகாசி மாதம், திருவிழா நடப்பது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டிற்கான விழா, நேற்று முன்தினம் நடந்தது. காலை, 5:00 மணிக்கு, மஹா சாந்தி ஹோமம், காலை, 6:00 மணிக்கு திருமஞ்சனம் நடந்தது. மாலை, 6:00 மணிக்கு, ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.மதுார் பஜனை கோஷ்டியினர், ஆஞ்சநேயரின் புகழ் பாடினர்.

அதை தொடர்ந்து, மலர் அலங்காரத்தில் சுவாமி வீதியுலா நிகழ்ச்சி நடந்தது. சுற்று வட்டார பக்தர்கள் பங்கேற்று, தீபம் ஏற்றி வழிபட்டனர். கோவில் தோன்றிய வரலாறு: மதுார் கிராமத்தில், பல ஆண்டுகளுக்கு முன் மக்களுடன் குரங்கு ஒன்று பழகி உள்ளது. ஒவ்வொரு வீட்டிலும் அக்குடும்பத்தில் ஒருவர் போல் சென்று, அவர்கள் தருகின்ற தின்பண்டங்களை, அந்த குரங்கு வாங்கி உண்ணுமாம். சில நேரங்களில், வீட்டு திண்ணை மற்றும் வீட்டிற்குள் உறங்கவும் செய்துள்ளது. திடீரென ஒரு நாள், அக்குரங்கு, மதுார் ஏரிக்கரையில் இறந்து கிடந்தது. மனிதர்களோடு நெருங்கி பழகிய குரங்கு இறந்த சோகத்தில், அப்பகுதியினர், இறந்து போன குரங்கின் நினைவாக, அதே இடத்தில் கோவில் எழுப்பி, ஆண்டுதோறும் விழா நடத்துவதாக, கிராம பெரியவர்கள் கூறினர்.

Tags

Next Story