ஸ்ரீ வஜ்ரகிரி வடிவேலன் கிரிவல குழுவின் வைகாசி மாத பௌர்ணமி கிரிவலம்

ஸ்ரீ வஜ்ரகிரி வடிவேலன் கிரிவல குழுவின் வைகாசி மாத பௌர்ணமி கிரிவலம்
ஸ்ரீ வஜ்ரகிரி வடிவேலன் கிரிவல குழுவின் வைகாசி மாத பௌர்ணமி கிரிவலம்
ஸ்ரீ வஜ்ரகிரி வடிவேலன் கிரிவல குழுவின் வைகாசி மாத பௌர்ணமி கிரிவலம் நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்டம் சின்ன திருவண்ணாமலை என்று அழைக்கப்படும் அச்சிறுபாக்கம் ஸ்ரீ வஜ்ரகிரி மலையில் அமைந்துள்ள அருள்மிகு மரகதாம்பிகை உடனுறை பசுபதீஸ்வரர் கோயிலில் மாதந்தோறும் ஸ்ரீ வஜ்ரகிரி வடிவேலன் கிரிவல குழு மற்றும் தென்னிந்திய இந்து திருக்கோயில் கூட்டமைப்பு சார்பாக நடத்தப்படும் வைகாசி மாத பௌர்ணமி கிரிவலம் அச்சிறுபாக்கம் வஜ்ரகிரி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள வஜ்ரகிரி வழிவிடு விநாயகர் ஆலயத்தில் உலக மக்கள் நன்மைக்காகவும், வேத மந்திரங்கள் ஒலிக்க, திருவாசகம், திருப்பதிகம் பாடி குரு மகா சன்னிதானம், ஸ்ரீ வஜ்ரகிரி மகான் வடபாதி ஆதீனம் சித்தர் சுவாமிகள் தலைமையில், செங்கோல் சங்கிலி மஸ்தான் பாபா சுவாமிகள், முன்னிலையில் சிவ கைலாய வாக்கியங்கள் முழங்க மகா தீபாராதனை நடைபெற்றது.


Tags

Next Story