வைகை அணை நீர் மீண்டும் இன்று திறப்பு

வைகை அணை நீர் மீண்டும் இன்று திறப்பு


வைகை அணையில் இருந்து முறைப்பாசன அடிப்படையில் நீர் மீண்டும் இன்று திறக்கப்பட்டது.


வைகை அணையில் இருந்து முறைப்பாசன அடிப்படையில் நீர் மீண்டும் இன்று திறக்கப்பட்டது.

வைகை அணை நீர் மீண்டும் இன்று திறப்பு வைகை அணையில் இருந்து முறைப்பாசன அடிப்படையில் இன்று( பிப்.21) காலை 6:00 மணிக்கு திண்டுக்கல், மதுரை மாவட்ட பாசனத்திற்கு நீர் திறக்கப்படுவதாக நீர்ப்பாசனத் துறையினர் தெரிவித்தனர்.வைகை அணை நீர்மட்டம் ஜன.6ல் 71 அடியாக இருந்தது. அன்றைய தினமே ஆற்றின் வழியாக சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட பாசனத்திற்கு நீர் திறந்து விடப்பட்டு ஜன. 23ல் நிறுத்தப்பட்டது.

திண்டுக்கல், மதுரை மாவட்டங்களின் பாசனத்திற்கு கால்வாய் வழியாக முறைப்பாசன அடிப்படையில் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதன் அடிப்படையில் பிப். 11 ல் அணையில் இருந்து திறக்கப்பட்ட நீர் பிப். 16 ல் நிறுத்தப்பட்டது.திண்டுக்கல், மதுரை மாவட்டங்களின் பாசனத்திற்கு கால்வாய் வழியாக முறைப்பாசன அடிப்படையில் 5 நாட்கள் நீர் திறந்து விடப்பட்டும் 5 நாட்கள் நிறுத்தப்பட்டும் வருகிறது. அணை நீர் மீண்டும் திறந்து விடப்படுகிறது. குடிநீருக்காக வினாடிக்கு 69 கன அடி வீதம் வழக்கம் போல் வெளியேறும். நேற்று அணை நீர்மட்டம் 69.62 அடியாக இருந்தது. வினாடிக்கு 1207 கன அடி நீர் வரத்து உள்ளது என்றார் .

Tags

Next Story