உத்தமர்கோயிலில் வைகாசி தேரோட்ட விழா

உத்தமர்கோயிலில் வைகாசி தேரோட்ட விழா

அசைந்து வரும் தேர்

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே பிச்சாண்டார்கோயில் ஊராட்சியில் உள்ள அருள்மிகு உத்தமர் கோயிலில் வைகாசி தேரோட்ட விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே பிச்சாண்டார்கோயில் ஊராட்சியில் உள்ள அருள்மிகு உத்தமர் கோயில் 108 திவ்ய தேசங்களில் மூன்றாவது திவ்யதேச ஸ்தலமாகவும், திருமங்கையாழ்வரால் பாடல் பெற்ற இத்தலம் 108 திருப்பதிகளில் ஒன்றானதும் மும்மூர்த்திகளும்,

முப்பெரும் தேவிகளும் எழுந்தருளிய திருத்தலம் இந்தியாவிலேயே அருள்மிகு உத்தமர் கோயில் ஒன்றே ஆகும்.இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி தேரோட்ட விழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்தாண்டுக்கான வைகாசி தேர் திருவிழாவை முன்னிட்டு கடந்த 15 ந்தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது.

இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் இரவில் சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா நடைபெற்றது இந்நிலையில் முக்கிய நிகழ்வான வைகாசி தேரோட்ட விழா இன்று நடைபெற்றது. முன்னதாக சௌந்தர்ய பார்வதி சமேத பிச்சாண்டேஸ்வரருக்கு சிறப்பு அலங்காரம் நடைப்பெற்று மகா தீபாதாரனை நடைப்பெற்றது.பின்னர் சௌந்தர்ய பார்வதி சமேத பிச்சாண்டேஸ்வரர் திருத்தேரில் எழுந்தருளினார்.

தொடர்ந்து திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.தேர் கோயில் வெளிப்பிரகாரத்தில் திருவீதி உலா வந்து நிலையை அடைந்தது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் தலைமையில் கோயில் பணியாளர்கள் கோயில் குருக்கள்கள், பக்தர்கள் செய்து வருகின்றனர்.

Tags

Next Story