மங்கள மாரியம்மன் கோவிலில் வைகாசி திருவிழா
நாகை மாவட்டம் புலவநல்லூர் மங்கள மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற வைகாசி திருவிழாவில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
நாகை மாவட்டம் புலவநல்லூர் மங்கள மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற வைகாசி திருவிழாவில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
புலவநல்லூர் மங்கள மாரியம்மன் கோவிலில் வைகாசி திருவிழா திரளான பக்தர்கள் தரிசனம் திருமருகல் ஒன்றியம் குத்தாலம் ஊராட்சி புலவநல்லூர் கிராமத்தில் வரசித்தி விநாயகர், மகா மங்கள மாரியம்மன் கோவில் உள்ளது.இந்த கோவிலில் வைகாசி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.திருவிழாவையொட்டி அம்மனுக்கு பால், தயிர்,பன்னீர்,இளநீர்,சந்தனம், நெய்,தேன்,திரவியம் உள்ளிட்டவைகளால் அபிஷேகமும்,சந்தனகாப்பு அலங்காரமும், கஞ்சி வார்த்தலும் நடைபெற்றது.பின்னர் மகா மங்கள மாரியம்மன் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.தொடர்ந்து இரவு வாகனத்தில் சாமி வீதி உலா நடைபெற்றது.தொடர்ந்து காலை அக்னி கப்பரை வீதியுலா நடைபெற்றது.இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை வழிபட்டு சென்றனர்.அப்போது பெரியநாயகி அம்மனுக்கு நடைபெற்ற சிறப்பு படையலில் பெரியநாயகி அம்மன் படையலை பார்ப்பது போல் காட்சியளித்தை பார்த்து பக்தர்களை ஆச்சரியம் அடைந்தனர்.
Next Story