சுவாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமை பகுதியில் வைகாசி திருவிழா
அய்யா வைகுண்டர் சுவாமி கோயில்
கன்னியாகுமரி மாவட்டம் சுவாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதில் ஆண்டு வரும் வைகாசி ஆவணி தை மாதங்களில் 11 நாட்கள் திருவிழா நடப்பது வழக்கம். இந்த ஆண்டுக்கான வைகாசி திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
முன்னதாக அதிகாலை நான்கு மணிக்கு முத்திரி பதமிட்டு பள்ளியறை திறத்தல், ஐயாவுக்கு பணிவிடை, தொடர்ந்து கொடிபட்டம் தயாரித்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது. அதை தொடர்ந்து காலை ஐந்து முப்பது மணிக்கு கொடியேற்றம் நடந்தது. நிகழ்ச்சியில் அய்யா வழி பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
இரவு 7 மணிக்கு அய்யா தொட்டில் வாகனத்தில் பதியை சுற்றி பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் நிகழ்ச்சி நடந்தது. திருவிழா நாட்களில் தினமும் அய்யாவுக்கு பணிவிடை, உச்சிப்படிப்பு, உகப்படிப்பு, வாகன பவனி, அய்யா வழி சமய சொற்பொழிவு ஆகியவை நடக்கிறது.
முக்கிய நாளான ஜூன் மூன்றாம் தேதி அன்று நண்பகல் 12 மணிக்கு அய்யா தேருக்கு எழுந்தருளி வீதி வழியாக செல்லும் தேரோட்டம் நடைபெறுகிறது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து செல்கிறார்கள்.