சிவகாசி அருகே வைகாசி மாத பொங்கல் விழா

சிவகாசி அருகே வைகாசி மாத பொங்கல் விழா

சிவகாசி அருகே வைகாசி மாத பொங்கல் விழாவில் அருள்மிகு ஸ்ரீகாளியம்மன் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளினார்.


சிவகாசி அருகே வைகாசி மாத பொங்கல் விழாவில் அருள்மிகு ஸ்ரீகாளியம்மன் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளினார்.
சிவகாசி அருகே களைகட்டிய அருள்மிகு காளியம்மன் கோவில் பொங்கல் விழா.. விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள சுக்கிரவார்பட்டி ஊர் சார்பாக நடைப்பெறும் அருள்மிகு ஸ்ரீகாளியம்மன் வைகாசி பொங்கல் விழா மேள தாளத்துடன் அதிவிமர்ச்சியாக நடைப்பெற்றன.கடந்த வாரம் வெள்ளிக்கிழமை அருள்மிகு ஸ்ரீகாளியம்மன் கோவிலில் கொடி சாட்டப்பட்டு ஒரு வாரம் நேர்த்தி கடன் செலுத்தும் பக்தர்கள் விரதம் கடைபிடித்து வந்த நிலையில் இன்று அதிகாலை ஸ்ரீகாளியம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு வண்ண,வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு வீதி உலா நடைப்பெற்றன.பின்னர் கோவில் வளாகத்தில் ஊர் பெரியவர்கள் முன்னிலையில் பொங்கல் வைக்கும் வைபவம் வெகு விமர்ச்சியாக நடைபெற்றன.பெங்கலின் முக்கிய நிகழ்வாக மஞ்சள் தண்ணி ஊற்றுதல், கயர் குத்து, அக்னி சட்டி, ஆயிரம் கண் பாளை,தொட்டில் கரும்பு, போன்ற நேர்த்திகடன் செலுத்தும் நிகழ்வுகள் நடைப்பெறுகிறது.பின்னர் நள்ளிரவு சிறப்பு அலங்காரத்தில் அருள்மிகு ஸ்ரீகாளியம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி மேள,தாள முழுங்க வாணவேடிக்கையுடன் வீதி உலா நடைபெறுகிறது. இத்திருவிழாவை காண சிவகாசி மற்றும் சுற்று பகுதியை சேர்ந்த கிராம மக்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்து திருவிழாவில் உறவினருடன் கொண்டாடும் நிகழ்வு நடைப்பெறும்.

Tags

Next Story