மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வைகாசி வசந்த உற்சவம் தொடக்கம்
மீனாட்சி அம்மன் கோயில்
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் வைகாசி வசந்த உற்சவம் இன்று தொடங்கி, 22-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இன்று முதல் 22-ஆம் தேதி வரை (1 முதல் 9-ஆம் திருநாள் வரை) சுவாமி, அம்மன், பஞ்ச மூர்த்திகளுடன் மாலை 6 மணியளவில் திருக்கோயிலில் இருந்து புதுமண்டபம் சென்று தீபாராதனை சிறப்பு பூஜை முடிந்ததும்,
அங்கிருந்து நான்கு சித்திரை வீதிகளில் உலா சென்று திருக்கோயில் சேத்தியாவர் மேலும், வருகிற 22-ஆம் தேதி 10-ஆம் திருநாள் காலையில் புதுமண்டபத்தில் எழுந்தருளி பகலில் தங்கி, வழக்கம் போல மாலையில் அபிஷேக தீபாராதனை முடிந்து, சித்திரை வீதி சுற்றி கோயில் வந்து சேர்வர்.
வசந்த உற்சவம் நடைபெறுவதையொட்டி வருகிற 13-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரை திருக்கோயில் சார்பாக உபய தங்கரதம், உபய திருக்கல்யாணம் ஆகிய சிறப்பு நிகழ்ச்சிகள் நடக்கப்படமாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.