பாலமுருகன் கோவிலில் வைகாசி விசாக பிரம்மோற்சவ விழா கொடியேற்றம்!

பாலமுருகன் கோவிலில் வைகாசி விசாக பிரம்மோற்சவ விழா கொடியேற்றம்!

ரத்தினகிரி பாலமுருகன் கோவிலில் வைகாசி விசாக பிரம்மோற்சவ விழா கொடியேற்றம் நடந்தது.


ரத்தினகிரி பாலமுருகன் கோவிலில் வைகாசி விசாக பிரம்மோற்சவ விழா கொடியேற்றம் நடந்தது.

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டை அடுத்துள்ள ரத்தினகிரி வள்ளி, தெய்வனை சமேத பாலமுருகன் கோவிலில் 2-ம் ஆண்டு வைகாசி விசாக பிரமோற்சவ விழா கொடியேற்றம் நடைபெற்றது. முன்னதாக கோவில் பரம்பரை அறங்காவலர் பாலமுருகனடிமை சுவாமிகள் முன்னிலையில் விக்னேஸ்வர பூஜை, புண்யாஹவாசனம், கிராம தேவதை பூஜை நடைபெற்றது.

இரவு மூஷிக வாகனத்தில் விநாயகர் வீதி உலாவும், நேற்று காலை கோவிலில் உள்ள கொடிமரத்தில் மயில் கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து கேடயஉலா உற்ஸவம் நடந்தது. மாலையில் அலங்கரிக்கப்பட்ட உற்சவர் அன்னவாகனத்தில் வீதி உலாவந்தார். தினமும் பல்வேறு சிறப்பு அலங்காத்தில் சுவாமி வீதிஉலாவும், வருகிற 22-ந் தேதி (புதன்கிழமை) தேரோட்டமும் நடைபெறுகிறது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்துள்ளது.

Tags

Read MoreRead Less
Next Story