நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோவில் வைகாசி விசாக திருவிழா

நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோவில் வைகாசி விசாக திருவிழா

அசைந்தாடி வரும் தேர்

நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோவில் வைகாசி விசாக தேர் திருவிழா நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே தேவதானத்தில் தென் தமிழகத்தில் பஞ்ச ஸ்தலங்களில் ஆகாய நலமாக அருள்மிகு நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோவில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம் இந்த ஆண்டு கடந்த 13ம் தேதி கொடி ஏற்றத்துடன் துவங்கியது.

ஏழாம் நாள் திருக்கல்யாணமும் ஒன்பதாம் நாள் தேரோட்டம் இன்று காலையிலேயே தேருக்கு சிறப்பு அபிஷேகங்கள் ஆராதனைகள் நடைபெற்றது. . அருள்மிகு நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி பெரிய தேரில் எழுந்தருளினார். பின்னால் வந்த சிறிய தேரில் அருள்மிகு தவம் பெற்ற நாயகி எழுந்தருளினார்.

சேத்தூர் ஜமீன்தார் மற்றும் கோவில் பரம்பரை அறங்காவலர் துரை ரத்தினகுமார் மேளதாளங்கள் முழங்க அழைத்துவரப்பட்டு தேரை வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தார் இந்த நிகழ்ச்சியில் இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் தனுஷ் எம் குமார் இராஜபாளையம் நகர் மன்ற தலைவி பவித்ரா ஷாம் ஊராட்சி மன்ற தலைவர் சிங்கராஜ் மற்றும் பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் தேரை வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை துவக்கி வைத்தனர்.

தேர் நான்கு ரத வீதிகள் வழியாக சிவனடியார்களின் வேத வாத்திய முழக்கங்கள், மேளதாளங்கள் முழங்க நான்கு வீதிகள் வழியாக இழுத்து வரப்பட்டு தேர் நிலைக்கு வந்து சேர்ந்தது. தேவதான மற்றும் சுற்றுலா பகுதிகளில் இருந்து வருகை தந்திருந்த ஆண் பெண் பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் ஊர்வலமாக வந்து தேருக்குப் பின்னால் விழுந்து வணங்கி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.

இந்த தேரோட்டம் திருவிழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் சார்பில் 15 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டன

Tags

Next Story