கொடியேற்றத்துடன் வைகாசி விசாகத் திருவிழா தொடக்கம்

கொடியேற்றத்துடன் வைகாசி விசாகத் திருவிழா தொடக்கம்

திண்டுக்கல் மாவட்டம் நத்தம்-கோவில்பட்டி கைலாசநாதர் கோயில் வைகாசி விசாகத் திருவிழா கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது .

திண்டுக்கல் மாவட்டம் நத்தம்-கோவில்பட்டி கைலாசநாதர் கோயில் வைகாசி விசாகத் திருவிழா கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது .
திண்டுக்கல் மாவட்ம், நத்தம்-கோவில்பட்டியில் உள்ள செண்பகவல்லி அம்பிகா சமேத கைலாச நாதர் கோயில் உள்ளது. இது மேற்கு பார்த்த சிவாலயம் என்ற சிறப்பு பெற்றது. இக்கோயிலின் வைகாசி விசாகத் திருவிழா சிறப்புற்றதாகும். இதையொட்டி இந்த ஆண்டு திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக செண்பகவல்லி அம்பிகா சமேத சிறப்பு கைலாசநாதர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் விழாவில் முதல் நாள் கேடயம் புறப்பாடாகி ஒவ்வொரு நாளும் சுவாமி மயில், குதிரை, அன்னம், காமதேனு போன்ற வாகனங்களில் எழுந்தருளி புறப்பாடாகி பக்தர்களுக்கு காட்சி தந்து அருள்பாலிப்பார்.
Next Story