சாத்தூரில் காங்கிரஸ் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக வைகோ பிரச்சாரம்
நானும் திமுக போராளி தான் திமுக தொண்டனாக இருந்து 28 முறை சிறை சென்றவன் நான திராவிடத்தை அழித்து பாரதிய ஜனதாவை வளர்ப்பேன் என்று பேசுவது இதுவரை எந்த பிரதமரும் பேசாத அநாகரிக பேச்சு என விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் காங்கிரஸ் வேட்பாளருக்காக கை சின்னத்தில் வாக்கு கேட்டு மக்கள் வெள்ளத்தில் கர்ஜித்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் முக்குராந்தல் பகுதியில் விருதுநகர் பாராளுமன்ற தொகுதிக்கு இந்தியா கூட்டணி கட்சி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மாணிக்கம் தாகூர் அவர்களுக்கு கை சின்னத்திற்கு வாக்கு கேட்டு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தேர்தல் பரப்புரையாற்றினார் அவருடன் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ரகுராமன் மற்றும் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் ஆகியோர் பொதுமக்களிடையே கை சின்னத்திற்கு வாக்கு கேட்டனர் . அதனைத் தொடர்ந்து பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நான் ஏற்கனவே சிவகாசி பாராளுமன்ற தொகுதியாக இருந்த போதும் பின்னர் விருதுநகர் பாராளுமன்ற தொகுதியாக மாற்றப்பட்ட பிறகும் இரண்டு முறை தேர்தலில் வெற்றி பெற்றுள்ளேன் அப்போது பலமுறை பிரச்சாரத்திற்கும் நன்றி தெரிவிக்கும் கூட்டத்திற்கும் வெற்றி விழாவிற்கும் வந்து இதே களத்தில் பேசியுள்ளேன்.
ஆனால் இது போன்ற மக்கள் வெள்ளத்தை நான் கண்டதில்லை என்று பொதுமக்களிடையே மகிழ்ச்சி பெருமிதத்துடன் தனது உரையை தொடங்கினார். நடைபெறக்கூடிய நாடாளுமன்றத் தேர்தல் இந்திய வரலாற்றிலேயே ஒரு முக்கியமான திருப்பத்தை ஏற்படுத்தக் கூடிய தேர்தலாக அமைய உள்ளது. இந்த தேர்தல் ஜனநாயகமா சர்வாதிகாரமா? என்பதை தீர்மானிக்கின்ற தேர்தல் மக்களாட்சி அல்லது பாசிச வெறிபிடித்த கூட்டமா என்பதை தீர்மானிக்கின்ற தேர்தல் என்றார். இந்தத் தேர்தலில் நமது விருதுநகர் பாராளுமன்ற தொகுதிக்கு காங்கிரஸ் வேட்பாளராக மாணிக்கம் தாகூர் போட்டியிடுகிறார் அவருக்கு கை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார். மாணிக்கம் தாகூர் இளம் தலைவர் ராகுல் காந்தியின் நெருக்கமானவர் இவர் எம்பியாக தேர்ந்தெடுக்கப்படும் போது மத்தியில் நமது கூட்டணி ஆட்சி அமையும் போது இவர் மூலம் நமக்குத் தேவையானதை மத்தியில் இருந்து பெறுவதற்கு இலகுவாக இருக்கும் என்றார்.
தற்போது உள்ள விருதுநகர் தொகுதியானது முன்பு சிவகாசி தொகுதியாக இருந்த போது நான் இரண்டு முறை வெற்றி பெற்றுள்ளேன். மதிமுக சார்பில் போட்டியிட்ட சிப்பிபாறை ரவிச்சந்திரன் ஒரு முறை வெற்றி பெற்றுள்ளார். தற்போது உங்கள் மத்தியில் பிரதம மந்திரியின்ஆணவத்தைப் பற்றி குற்றம் சாட்ட விரும்புகிறேன். பிரதம மந்திரி அவர்களே 125 கோடி மக்களின் தலைவர் நீங்கள் . நீங்கள் திராவிடத்தை ஒழிப்பேன் என்று பேசலாமா.
இதுவரை இது போன்று எந்தப் பிரதமரும் பேசியதில்லை. ஒரு அரசியல் கட்சியை பல ஆண்டுகளுக்கு மேல் தியாகம் செய்து வளர்த்த கட்சியை பலர் தங்களது இன் உயிரையும் கண்ணீரும் ரத்தமும் சிந்தி வளர்த்த மாபெரும் இயக்கத்தை நடேசன் பெரியார் அண்ணா கலைஞர் ஆகியோர் உருவாக்கிய இயக்கம் இந்த திராவிட இயக்கம். தியாகத்தாலும் ரத்தத்தாலும் உருவாக்கப்பட்ட இந்த இயக்கத்தை எத்தனை முறை சிறை சென்றோம் என்று எங்களுக்கே கணக்கு தெரியாது.
நானே திராவிடத்துடன் ஆக இருக்கும்போது 24 முறை சிறை சென்று உள்ளேன் அப்படி தியாகத்தால் உருவாக்கப்பட்ட கட்சியை அழிப்பேன் என்று பிரதமர் கூறுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தேர்தல் பிரச்சாரத்தில் உங்களது கொள்கையை கூறலாம் அல்லது செய்த சாதனையை விளக்கலாம் அல்லது இன்னது செய்வேன் என்று கூறி வாக்கு கேளுங்கள் அதை விடுத்து ஒரு கட்சியை அழித்துவிடுவேன் என்று பேசுவது இதுவரை எந்த பிரதமர் பேசியது கிடையாது. இதை பிரதமருக்கு நான் சொல்வேன் நீங்கள் பேச எழுந்திருக்கும் போது நான் எதிலிருந்து கேட்பேன் அழித்து விடுவேன் என்று சொன்னீர்களே அந்த திராவிட இயக்கத்தில் இருந்து வந்திருக்கிறேன்.
எங்களுக்கு பதில் சொல்லுங்கள் என்று நான் கேட்பேன். நரேந்திர மோடி தமிழகத்தில் வாக்கு கேட்க எட்டு தடவை சுற்றி வந்துள்ளார் எட்டுத்தொடவை அல்ல என்பது முறை சுற்றி வந்தாலும் நீங்கள் தோற்கப் போவது உறுதி இந்துத்துவா கட்சி அடிபட்டு வீழப்போவது உறுதி இதில் எந்த சந்தேகமும் கிடையாது கடந்த சில மாதங்களுக்கு முன்னால் இந்துத்துவா கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து ஒரு கூட்டம் போட்டார்கள் சனாதன சர்ப்பவ் என்று பெயர் வைத்தார்கள் எங்களது எதிர்கால திட்டம் என இன்று அறிவித்தார்கள் 32 பக்கத்திற்கு ஆவணம் வந்தது அதில் முதல் வரி இனிமேல் இந்த நாட்டிற்கு இந்தியா என்ற பெயர் கிடையாது பாரத் என்று தான் பெயர் இருக்கும். இந்தியா என்ற பெயர் ஆங்கிலேயன் தந்தது அதற்கு முன்னால் இந்தியா என்ற பெயர் கிடையாது வெள்ளைக்காரணை எதிர்த்துப் போராடிய போராட்டத்தின் மூலம் கத்தியும் கம்பும் தான் இந்தியாவை ஒன்றிணைத்தது இந்த நாட்டை உருவாக்கி கொடுத்தது வெள்ளையர்கள் இதனை துண்டு துண்டாக பிளக்க பார்த்தார்கள். அதேபோல நீங்கள் காஷ்மீரத்தை மூன்று துண்டாக பிரித்து விட்டீர்கள். நேரு கொடுத்த வாக்குறுதியை காற்றில் பறக்க விட்டீர்கள். சர்வாதிகாரம் உங்களது நெஞ்சில் இருக்கிறது அதனால் தான் இப்படிப்பட்ட காரியங்களை செய்து கொண்டு வருகிறீர்கள். இரண்டாவதாக முஸ்லிம்களுக்கு வாக்குறுதி கிடையாது இந்தியும் சமஸ்கிருதமும் தான் ஆட்சி மொழியாக இருக்கும் இப்படிப்பட்ட ஆவணத்தை வெளியிட்டு இந்தியா முழுவதும் பரப்பி விட்டார்கள் நான் கேட்கிறேன் பிரதம மந்திரி அவர்களே இதுதான் உங்கள் திட்டமா அப்படி என்றால் இங்கு சமஸ்கிருதம் தான் நாட்டை ஆள வேண்டும் நாங்கள் வைத்து தான் சட்டம் என்று நினைத்தால் அதை தூக்கி எறிகின்ற கூட்டமாக இங்கு திரண்டு இருக்கிற மக்கள் கூட்டம் இந்தியா முழுவதிலும் திரண்டு எழும்.
அது முடியாமல் போனால் இந்தியா பல துண்டுகளாக வரைபடத்தில் ரத்தக் களரிகளாக சிவப்பு கோடுகளாக துண்டுபட்டு போகும் அதை மறந்து விடாதீர்கள் தற்போது தேர்தலுக்காக திரும்பத் திரும்ப தமிழகம் வருகிறீர்களே வெள்ளம் சூழ்ந்த போது வீடு இழந்து விவசாயம் இழந்து பொதுமக்களும் விவசாயிகளும் கதறிய போது ஒருமுறையாவது வந்து எட்டிப் பார்த்தீர்களா.
துப்பாக்கி சூடு நடைபெற்ற மணிப்பூரில் நீங்கள் அங்கும் போகவில்லை தமிழகத்தில் திராவிடத்தை அழிப்போம் என்று கூறி எட்டு முறை வந்து விட்டீர்கள் ஒரு கவர்னரை நீங்கள் எடுபிடியாக வைத்துள்ளீர்கள் சட்டமன்றத்தில் தமிழக அரசு எழுதிக் கொடுக்கும் உரையை நிராகரித்தார் இது போன்ற எந்த மாகாணத்திலும் நடந்ததில்லை அண்ணா தமிழ்நாடு என்று பெயர் சூட்டிய பொழுது மூன்று முறை தமிழ்நாடு என்று கூறியபோது அனைவரும் வாழ்க வாழ்க என்று கூறினர் இன்னும் ஒன்று கூறினார் நான் இன்று அறிவித்த தமிழ்நாடு என்ற பெயரை யாராலும் மாற்ற முடியாது என்று தெரிவித்தார் கவர்னர் தமிழ்நாடு என்ற பெயரை மாற்றி தமிழகம் என்று அறிவித்தாரே இந்த அந்த தைரியம் அவருக்கு யார் கொடுத்தது? அவருக்கு என்ன அதிகாரம் இருக்கிறது. டெல்லியில் விவசாயிகள் போராடிய போது வாடிய போது எட்டிப் பார்க்கவில்லை கோரிக்கைகளை காது கொடுத்து கேட்கவில்லை.
இதே தமிழகத்தில் தான் மகாத்மா காந்தி அரையாண்டியை சூட்டி உலகம் முழுவதும் பலம் வந்தார். இந்த நாட்டின் விடுதலைக்காகவும் இந்து முஸ்லிம் ஒற்றுமைக்காகவும் தன் உயிரை கொடுத்த மகாத்மா காந்தி. தற்போது இந்துத்துவா கட்சிகள் கூட்டம் போட்டு காந்தியை சுட்டுக்கொன்ற நாதராம் கோட்சேவுக்கு சிலை எழுப்பி மரியாதை செலுத்தியுள்ளார்கள். இது போன்ற அக்கிரமம் இதுவரை நடந்ததில்லை உலக அரங்கில் பல்வேறு நாடுகளில் அலுவலகங்களில் மகாத்மா காந்தி படம் வைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா தென் அமெரிக்கா தென்னாபிரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் மகாத்மா காந்தியின் படம் வைக்கப்பட்டது ஆனால் இங்கே காந்தியின் தேசமான இந்தியாவில் அவரை சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சேவைக்கு சிலைய எழுப்பி மரியாதை செலுத்தும் தைரியம் வந்திருக்கிறது என்றால் அதற்கு காரணம் நரேந்திர மோடி அவர் தமிழகத்தை உள்ளடக்கிய பகுதி அடக்கிய ஆள நினைக்கிறார் அது ஒரு காலம் நடக்காது. தேர்தல் அறிவித்த பின்னர் அனைத்து அரசியல் தலைவர்களின் அறைகள் பூட்டப்பட்டது.
தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்துவிட்டு பிரதம மந்திரி கவர்னரின் அலுவலகத்தில் சென்றது எந்த வகையில் நியாயம் இதற்கு நீங்கள் பதில் சொல்ல வேண்டும் இதுவரை இப்படி நடந்ததில்லை எந்த தேர்தலிலும் எந்த கவர்னரும் பிரச்சாரத்திற்கு வந்ததில்லை இதற்கு என்ன காரணம் என்றால் ஆரம்பத்தில் நான் கூறியது போல மமதை ஆணவம் நாம் செய்வதை யார் என்ன செய்து விட முடியும் நான் ஜெயித்து விடலாம் என்ற எண்ணத்திலே இவ்வாறு செய்கிறார்கள்.அதில் மண் விழுந்து போகும் மக்கள் அதை மாற்றி விடுவார்கள் என்று வீரம் முழக்கமிட்டார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ.