வைகுண்ட ஏகாதசி திருவிழா
குமாரபாளையம் காட்டூர் பாண்டுரங்கர் கோவில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள காட்டூர் பகுதியில் நூற்றாண்டு பழமைவாய்ந்த பாண்டுரங்கர் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்க வாசல் திறப்பு விழா வைபவம் நடந்தது. சொர்க்க வாசல் திறப்பை முன்னிட்டு பெருமாளுக்கு 11 வகையான சந்தனம். சவ்வாது. இளநீர்.பால் .தயிர்.குங்குமம். பஞ்சாமிர்தம்.நெய். திருமஞ்சனம். உள்ளிட்ட 11 பொருட்களால் அபிசேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து சொர்க்க வாசலுக்கு தீபாராதனை நடந்தது. ஆழ்வார் பாசுரம் பாட, பக்தர்கள் கோவிந்தா என கோஷமிட சரியாக அதிகாலை 5:20 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்பட்டு நம்மாழ்வார் எதிர்சேவை செய்து வரவேற்க பாண்டுரங்கர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதனையடுத்து பக்தர்கள் கோவிந்தா,கோவிந்தா கோஷத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர். இதனைத் தொடர்ந்து சுவாமி பல்லக்கில் பக்தர்கள் சுமக்க கோயிலை சுற்றி வலம் வந்தார் நிகழ்ச்சியில் குமாரபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த நூற்றுகணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Next Story