வைகுண்ட ஏகாதசி: தனியார் பள்ளியில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு தனியார் பள்ளியில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
தேனி தனியார் பள்ளியில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பெருமாள், ஆண்டாள், விஷ்ணு போல வேடம் அணிந்து சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வை தத்ரூபமாக கண்ணெதிரே கொண்டுவந்தனர்.
மேடையில் அமைக்கப்பட்ட சொர்க்கவாசலுக்கு தீபாராதனை காட்டப்பட்டு கதவு திறக்கப்பட்டது.
அங்கு சயன கோலத்தில் அமர்ந்திருக்கும் பெருமாளை போல் காட்சி தந்த மழலை குழந்தை பெருமாளை நேரடியாக கண்ணெதிரே கொண்டுவந்த நிகழ்வு அங்கிருந்தவர்களை வெகுவாக கவர்ந்தது பின்னர் சொர்க்கவாசல் திறக்கப்பட்ட போது மழலைக் குழந்தைகள் கோவிந்தா கோவிந்தா என கோஷங்களை எழுப்பி கைகூப்பி வணங்கினர்.
இந்த நிகழ்வில் ஏராளமான மழலை குழந்தைகள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Next Story