வைகுண்ட ஏகாதசி; திருச்சி மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை

வைகுண்ட ஏகாதசி; திருச்சி மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை

வைகுண்ட ஏகாதசி திருவிழாவை முன்னிட்டு நாளை திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

வைகுண்ட ஏகாதசி திருவிழாவை முன்னிட்டு நாளை திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

108 வைணவத் திருத்தலங்களுள் முதல் திருத்தலமாகப் போற்றப்படும் திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோயில், பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படுகிறது. ஆண்டுதோறும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதேசி சொர்க்கவாசல் திறப்பு வெகு விமர்சையாக நடைபெறும். ஸ்ரீரங்கத்தில் டிசம்பர் 12ம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் வைகுண்ட ஏகாதசி விழா தொடங்குகியது. அதனைத் தொடர்ந்து பகல் 10 விழாவின் பத்தாம் திருநாளான இன்று மோகினி அலங்காரம் நடைபெற்றது. இராபத்து திருவிழாவின் முதல் நாளான வைகுண்ட ஏகாதசி எனப்படும் பரமபத வாசல் திறப்பு நாளை அதிகாலை 4மணிக்கு நடைபெறுகிறது.

வைகுண்ட ஏகாதசி பெருவிழா வருகிற 2024 ஆம் ஆண்டு ஜனவரி 2ஆம் தேதி காலை நம்மாழ்வார் மோட்சத்துடன் இனிதே நிறைவடையும். ஆகையால் வரும் 23ஆம் தேதி திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படும் என திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் அறிவித்துள்ளார். அதேபோல் மாநகராட்சி சார்பில், ஸ்ரீரங்கம் பேருந்துகள் நிற்குமிடம், ஸ்ரீரங்கம் நகரம் முழுவதும் சுகாதாரப் பணிகள், குடிநீர் வசதி, தடையின்றி மின்சாரம், இலவச மருத்துவ உதவி உள்ளிட்ட பக்தா்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் அலுவலா்கள் செய்து தர வேண்டும் எனவும் அந்தந்த துறையினருக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை சிறப்பாக செயல்படுத்திட வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்

Tags

Next Story