வைர ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேக விழா - பக்தர்கள் சாமி தரிசனம்

வைர ஆஞ்சநேயர் திருக்கோவில் கும்பாபிஷேக விழா - ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் To சேலம் சாலையில் வைரமலையில் அமைந்திருக்கும் ஶ்ரீ வைர ஆஞ்சநேயர் திருக்கோவிலில் மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்திருக்கோவிலில் 4 கால வேள்விகள் மற்றும் சிறப்பு பூஜைகளை தொடர்ந்து, மூல மந்திர ஹோமம், அஸ்திரபகமும், 108 திவ்ய மகா ஹோமம், தொடர்ந்து மகா தீபாதாரணை நடைபெற்றது.

யாகசாலையில் இருந்து தீர்த்த நீர் கூடங்கள் புறப்பட்டு வைரமலையில் குன்றின் மேல் அமைந்துள்ள வைர ஆஞ்சநேயர் கோவில் கோபுரத்தில் அமைந்துள்ள கலசங்களில் பட்டாச்சாரியார்களால் தீர்த்தநீர் ஊற்றினர். பக்தர்கள் "கோவிந்தா கோவிந்தா" என்ற முழக்கத்துடன் பரவசத்துடன் ஆஞ்சநேயர் அருள் பெற்றனர். பின்னர் ஸ்ரீவித்யா கணபதி, ஸ்ரீ வைர ஆஞ்சநேயர் சுவாமிகளுக்கு தீபாதாரனை காண்பிக்கப்பட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டது. விழாவில் ஆயிரக்கணக்கானோர் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். திருகோவில் நிர்வாகம் சார்பில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags

Next Story