சிமென்ட் காரை பெயர்ந்த வையாவூர் பயணியர் நிழற்குடை

சிமென்ட் காரை பெயர்ந்த வையாவூர் பயணியர் நிழற்குடை

பயணிகள் நிழற்குடை 

சேதமடைந்த பயணியர் நிழற் குடையை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை

காஞ்சிபுரம் மாவட்டம்,வாலாஜாபாத் ஒன்றியம், வையாவூர் பாமா ருக்மணி வேணுகோபாலர் கோவில் அருகில், 25 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பயணியர் நிழற்குடை உள்ளது. இங்கு வையாவூர் மற்றும் சுற்றியுள்ள பகுதியினர் தாங்கள் பயணிக்க வேண்டிய பேருந்து வரும் வரை, பயணியர் நிழற்குடையில் காத்திருந்து பயணித்து வருகின்றனர்.

பயணியர் நிழற்குடை, 25 ஆண்டை கடந்த பழைய கட்டடம் என்பதால், கூரையில் சிமென்ட் காரை பெயர்ந்து விழுந்து கம்பிகள் வெளியே தெரியும் நிலையில் உள்ளதோடு, சுவரில் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டு, சிதிலமடைந்த நிலையில் உள்ளது.

இதனால், பேருந்துக்காக காத்திருக்கும் பயணியர், நிழற்குடை எப்போது இடிந்து விழுமோ என்ற அச்சத்தில், காத்திருக்க வேண்டிய அவலநிலை உள்ளது. எனவே, சேதமடைந்த பயணியர் நிழற்குடையை அகற்றிவிட்டு, புதிய பயணியர் நிழற்குடை அமைக்க, வையாவூர் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர்.

Tags

Next Story