புதுக்கோட்டையில் வாஜ்பாய் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களின் 99 ஆவது பிறந்தநாள் விழாவை நல்லாட்சி தினமாக அனுசரித்து தமிழகம் முழுவதும் பாரதிய ஜனதா கட்சி வாக்குச்சாவடி அளவிலான கிளை அமைப்புகளில் கொண்டாடும்படி மாநில தலைமை அறிவுறுத்தியதின் அடிப்படையில்,புதுக்கோட்டை நகர் மேற்கு திலகர் திடல் கிளை எண் 87ல், புதுக்கோட்டை மேற்கு மாவட்ட பாஜக பொது செயலாளர் ஏவிசிசி கணேசன் தலைமையில் வாஜ்பாய் பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டது.
நகர தலைவர் லெட்சுமணன், உள்ளாட்சி பிரிவு மாவட்ட தலைவர் சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாதஸ்வர தவில்வாத்ய கச்சேரியுடன் நடைபெற்ற இவ்விழாவில்,நான்கே வயதான ஆதிமாறன் ஆனந்த் என்கிற குழந்தை வாஜ்பாய் திருவருவ படத்திற்கு மாலை அணிவித்து வணங்கி அனைவருக்கும் இனிப்புகள் வழங்கியது.
வாஜ்பாய் ஆட்சிக்கால சாதனைகள்,அவரின் தியாகங்கள் குறித்து மாவட்ட பொது செயலாளர் ஏவிசிசி கணேசன் சிறப்புரையாற்றினார். தொடர்ந்து அரசு மருத்துவ கல்லூரியில் இரத்ததான முகாம் நடத்தப்பட்டு ஹார்லிக்ஸ் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. விழாவில் சமூக செயற்பாட்டாளர் உடற்கல்வி முத்துராமலிங்கம்,அரசு இரத்தவங்கி மருத்துவர் சரவணன் மற்றும் நகர பாஜக பொது செயலாளர் சிவஇளங்கோ, பொருளாளர் ஆனந்தன்,செயலாளர் அன்பழகன், துணைத்தலைவர் தர்மராஜ்,வேலு, பாண்டியன் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.நிறைவாக திலகர்திடல் பாஜக கிளைத்தலைவர் ராஜேந்திரன் அனைவருக்கும் நன்றி கூறினார்.