ராசிபுரத்தில் வாஜ்பாய் 99வது பிறந்தநாள் விழா

ராசிபுரத்தில் வாஜ்பாய் 99வது பிறந்தநாள் விழா

பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கிய பாஜகவினர்

ராசிபுரத்தில் வாஜ்பாய் 99வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

முன்னாள் பாரத பிரதமர் பாரத ரத்னா அடல் பிஹாரி வாஜ்பாயின் 99ஆவது பிறந்தநாள் விழா நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் 14 வது வார்டு மற்றும் 2வது வார்டு சித்திவினாயகர் கோவில் பகுதியில் மாநில துணைத் தலைவர் சேலம் பெருங்கோட்ட பொறுப்பாளர் டாக்டர் கே.பி.ராமலிங்கம் ஆணைப்படி நகர தலைவர் வேலு ஆலோசனையின் பேரில் நகர பாஜக துணை தலைவர் எஸ்.குமார் தலைமையில் நடைபெற்றது.

இதில் அடல் பிஹாரி வாஜ்பாய் அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி சிறப்பாக கொண்டாடினர். மேலும் நிகழ்சியில் நகர பொதுச்செயலாளர் நாகராஜன், நகர துணை தலைவர் சிமெண்ட் கார்திக், நகர பொருளாளர் தொகுதி ராஜா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் முன்னால் நகர தலைவர் மணிகண்டன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் யுவராஜா, கிளை தலைவர் தங்கவேல், ஹரிஹரன் ,கிருஷ்ணன் துளசிராமன், வர்தக பிரிவு விஜயகுமார், OBC அணி தலைவர் பாஸ்கர் ,மகளிர் அணி கீதா, ராணி ஆகியோர் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

Tags

Next Story