மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் வளர்பிறை பிரதோஷம்:
வளர்பிறை பிரதோஷம்
விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் பங்குனி மாத வளர்பிறை பிரதோஷம் சிறப்பு பூஜைகள் வெகு விமர்சையாக நடைபெற்றது..
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் பங்குனி மாத வளர்பிறை பிரதோஷத்தில், நந்தியம் பெருமானுக்கு 40 லிட்டர் பால் மற்றும் தயிர், இளநீர், சந்தனம், திருநீறு, மஞ்சள் உள்ளிட்ட பலவகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, ரூ.20 பணத்தாள்களைக் கொண்ட பெரிய பணமாலை உட்பட எலுமிச்சை, தாமரைப்பூ, அருகம்புல், மாவிலை, எருக்கம் பூ, மஞ்சள், வில்வ இலை, உள்ளிட்ட பல வகையான மாலைகளால் நன்கு அலங்கரிக்கப்பட்டப்பின் சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது.
இதில் விளாத்திகுளம் பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து சென்றனர். மேலும் கோவிலுக்கு வந்த பத்தர்கள் அனைவருக்கும் 3 வகையான சாதங்கள், அண்ணாச்சிப்பழம், செவ்வாழை, தேங்காய் உள்ளிட்ட பொருட்கள் பிரசாதமாக வழங்கப்பட்டன.
Next Story