வலிவலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி நூற்றாண்டு நிறைவு விழா

வலிவலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி நூற்றாண்டு நிறைவு விழா

நூற்றாண்டு விழா 

கீழ்வேளூர் அருகே வலிவலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடந்த நூற்றாண்டு நிறைவு விழாவில் முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

நாகை மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியம் வலிவலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி நூற்றாண்டு நிறைவு விழா நடைபெற்றது. விழாவிற்கு ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் பாலசுப்பரமணியன், அப்பாதுரை ஆகியோர் தலைமை தாங்கினார்கள். விழா குழுவை சேர்ந்த மாரிமுத்து, ரவி, பள்ளி மேலாண்மை குழு தலைவர் வெண்ணிலாதிருநாவுக்கரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளியின் தலைமை ஆசிரியர் முரளி வரவேற்றார்.

விழாவில் நாகை மாவட்ட தி.மு.க. செயலாளரும், தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகத் தலைவர் கௌதமன் கலந்து பள்ளியின் நடை பாதையை திறந்து வைத்து பேசுகையில் தனியார் பள்ளிகள் ஓங்கி வளர்ந்து கொண்டு இருக்கும் சூழலில் ஒரு அரசு பள்ளி நூற்றாண்டு விழா கண்டுள்ளது என்பது இந்த பள்ளி சிறப்பாக உள்ளது என்பது இந்த பள்ளியின் பெருமையை காட்டுகிறது. இந்த ஊர் மக்கள் கொடுத்த நிதியில் பொதுமக்கள் பங்களிப்பு, அரசு பங்களிப்புடன் இங்கு நமக்கு நாமே திட்டத்தில் நிழல் கூறை அமைக்கப்பட்டுள்து.

அரசு இந்த பள்ளிக்கு நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடை பாதை அமைக்கப்பட்டுள்ளது. ஒரு பள்ளி சிறப்பாக இருக்க வேண்டும் என்றால் மாணவர்கள் பங்களிப்புடன், பெற்றோர்கள் பங்களிப்புடன், ஊர் மக்கள் பங்களிப்புடன் தான். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கல்விதுறைக்கும், சுகாதார துறைக்கும் தான் அதிக நிதி ஒதுக்கிடு செய்து வருகிறார். தமிழ்நாடு முதலமைச்சர் கல்விக் முக்கியத்தும் கொடுப்பது கல்வி வளர்ந்தால் மட்டும் தான் சமுகம் வளர்ச்சி அடையும், மதிய உணவு திட்டத்தை காமராஜர் கொண்டு வந்தார்.

அதற்கு முன் நீதி கட்சி காலத்தில் சென்னையில் மதிய உணவு திட்டம் நடைமுறை படுத்தப்பட்டது. அந்த மதிய உணவு திட்டத்தை எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டமாக மாற்றினார். அதன் பின் கலைஞர் சத்துணவு சத்தான உணவாக இருக்க வேண்டும் என்று வாரத்தில் 5 முறை முட்டையை வழங்க செய்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காலை உணவு திட்டத்தை தொடக்கப்பள்ளியில் தொடங்கினார். இந்த காலை உணவு திட்டத்திற்க ஆண்டுக்கு ரூ.500 கோடி நிதி ஒதுக்கியுள்ளார். பள்ளியின் ஆசிரியர் பணி சிறப்பான பணி ஆசிரியர்கள் தான் வருங்கால சமுதாயத்தை உருவாக்குகிறார்கள் இவ்வாறு பேசினார். விழாவில் மாவட்ட கூடுதல் ஆட்சியர் ரஞ்ஜித்சிங், வட்டார ஆத்தமா குழு தலைவர் கோவிந்தராசன, வட்டார ஆத்தமா குழு உறுப்பினர் பழனியப்பன், ஊராட்சி மன்ற தலைவர்கள் மணிகண்டன், ரேவதிஐயப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story