அரசு பள்ளி,கல்லூரியில் வல்லபாய் பட்டேல் பிறந்த தின கொண்டாட்டம்

குமாரபாளையம் அரசு பள்ளி மற்றும் அரசு கலை கல்லூரியில் வல்லபாய் பட்டேல் பிறந்த தின கொண்டாட்டம் நடந்தது.
குமாரபாளையம் அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடந்த விழாவில் முதல்வர் ரேணுகா தலைமை வகித்தார். மாணவ, மாணவியர் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் உறுதிமொழி எடுத்துக்கொன்டனர். குமாரபாளையம் அரசு உதவி பெறும் சி.எஸ்.ஐ. நடுநிலைப்பள்ளியில் நடந்த விழாவில் தலைமை ஆசிரியை சுகந்தி தலைமை வகித்தார். வல்லபாய் படேல் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாணவ, மாணவியருக்கு பேச்சு, கட்டுரை, வினாடி வினா போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசாக புத்தகங்கள் வழங்கப்பட்டன. நேற்று சேமிப்பு தினம் என்பதால் மாணவ, மாணவியர்களுக்கு சேமிப்பு பழக்கம்குறித்து சொல்லி, சேமிப்பு தொடங்கப்பட்டது. விடியல் பிரகாஷ், தன்னார்வலர்கள் சித்ரா, ஜமுனா உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story