தர்மபுரியில் வள்ளல் அதியமான் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

தர்மபுரியில் வள்ளல் அதியமான் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

வள்ளல் அதியமான் பிறந்த நாள் கொண்டாட்டம்

வள்ளல் அதியமான் கோட்டத்தில் சித்ரா பவுர்ணமி வள்ளல் அதியமான் அவர்களின் பிறந்த நாள் அரசு விழாவில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் ஆட்சியர் தலைமையில் கொண்டாடப்பட்டது

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், அதியமான் கோட்டை ஊராட்சி, வள்ளல் அதியமான் கோட்டத்தில் சித்ரா பவுர்ணமி வள்ளல் அதியமான் அவர்களின் பிறந்த நாள் அரசு விழாவில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி இஆப., வள்ளல் அதியமான் மற்றும் அவ்வையார் ஆகியோரின் திருவுருவ சிலைகளுக்கு இன்று (23.04.2024) மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.தமிழ் சான்றோர்கள்,

விடுதலைப் போராட்ட தியாகிகள் மற்றும் தலைவர்கள் ஆகியோரை பெருமைப்படுத்தும் வகையில், அமைக்கப்பட்டுள்ள மணிமண்டபங்களில் அன்னார்களது பிறந்த நாளன்று தமிழ்நாடு அரசின் சார்பில் ஆண்டுதோறும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அரசு விழாவாகக் கொண்டாட ஆணையிடப்பட்டுள்ளது.

அரசு நம் தாய் மொழியாம் தமிழ் மொழியை வளர்த்திட அரும்பாடுபட்ட தமிழறிஞர்கள். தமிழகத்தை உயர்த்திட தம் ஆயுளையே அர்ப்பணித்தார்கள். நாட்டின் விடுதலைக்கு பாடுபட்டு தம் இன்னுயிரை ஈந்த தியாகிகளை பெருமைப்படுத்தும் வகையில் தமிழகத்தில் பல்வேறு மணிமண்டபங்கள் அமைக்கப்பட்டு. அவற்றில் தமிழக அரசின் சார்பில் ஆண்டுதோறும் பிறந்த நாள் விழா செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் கொண்டாடப்பட்டு வருகின்றது.அந்த வகையில், வள்ளல் அதியமான் கோட்டத்தில் சித்ரா பவுர்ணமி தினமானஇன்றைய தினம் வள்ளல் அதியமான் அவர்களின் பிறந்த நாள் விழா அரசு விழாவாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி இஆப.,கலந்துக் கொண்டு வள்ளல் அதியமான் மற்றும் அவ்வையார் ஆகியோரின் திருவுருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். இவ்விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் செ. பால்பிரின்ஸ்லி ராஜ்குமார்.

வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சு.மோகன், நல்லம்பள்ளி வட்டாட்சியர் பார்வதி.நல்லம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் லோகநாதன், ஆறுமுகம் உள்ளிட்ட அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story