வள்ளி கந்தசாமி பெருமான் திருக்கல்யாணம்

வள்ளி கந்தசாமி பெருமான் திருக்கல்யாணம்

வள்ளி கந்தசாமி பெருமான் திருக்கல்யாணம்

திருப்போரூர் கந்தசாமி திருக்கோவிலின் பிரம்மோற்சவ பெருவிழாவின் முக்கிய நிகழ்வான வள்ளி கந்தசாமி பெருமான் திருக்கல்யாணம் சிறப்பாக நடைபெற்றது.
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ கந்தசாமி திருக்கோவிலில் மாசி மாத பிரம்மோற்சவ பெருவிழா கடந்த 15 -ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து 13 நாட்கள் நடைபெறும் விழாவில் கடந்த வாரம் தேரோட்டம் அதனை தொடர்ந்து தெப்ப உற்சவம் உள்ளிட்டவை நிறைவேறிய நிலையில் இன்று இறுதி நாளில் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் சிறப்பாக நடைபெற்றது.. கோவில் வளாகத்தில் உள்ள உற்சவ மண்டபத்தில் ஸ்ரீ கந்தசாமி பெருமான் வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.. அரோகரா கோஷத்துடன் திரளான பக்தர்கள் முன்னிலையில்,கந்தசாமி பெருமானின் திருக்கல்யாண வைபவத்தை கண்டு தரிசனம் செய்தனர் அதனைத் தொடர்ந்து நான்கு மாட வீதிகளில் வீதி உலா வந்த வள்ளி தெய்வானை சமேத கந்த பெருமானுக்கு கற்பூர தீபம் ஏற்றி தேங்காய் உடைத்து பொதுமக்கள் தரிசனம் செய்தனர்..திருக்கல்யாண வைபவத்தை இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கோவில் செயல் அலுவலர் குமரவேல், மேலாளர் வெற்றிவேல் உள்ளிட்டோர் சிறப்பாக செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.. அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags

Next Story