திருப்பூரில் வள்ளி கும்மி அரங்கேற்ற நிகழ்ச்சி

திருப்பூரில் 120 மணி நேரம் பயிற்சி முடித்த 100க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்ற வள்ளி கும்மி அரங்கேற்றம் நடைபெற்றது.

திருப்பூரில் 120 மணி நேர பயிற்சி முடித்த 100க்கு மேற்பட்ட பெண்கள் பங்கேற்ற வள்ளிக்கும்மி அரங்கேற்றம் நடைபெற்றது.

இந்த கலையை தமிழ்நாடு அரசு பாடத்திட்டமாக கொண்டு வந்து பயிற்றுவிக்க வேண்டும் என்று வள்ளிக்கும்மி ஆசிரியர் நவீன் கோரிக்கை விடுத்துள்ளார். திருப்பூர் வேலம்பாளையம் பகுதியில் முருகன் வள்ளி திருமண வரலாறை எடுத்துரைக்கும் நிகழ்வாக பாரம்பரிய வள்ளிக்கும்மி அரங்கேற்றம் நடைபெற்றது. வள்ளிக்கும்மி பயிற்சியாளர் நவீன் தலைமையில் இதில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு வள்ளி, முருகன் திருமண வரலாறை விளக்கும் கும்மி நடனம் ஆடி அரங்கேற்றம் செய்தார்கள்,

கும்மி நிகழ்ச்சியை ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கண்டு களித்தனர். ’வள்ளிக்கும்மியானது உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்வு தரக்கூடிய பாரம்பரியக்கலை என்றும், இங்கு அரங்கேற்றம் செய்யும் பெண்கள் 120 மணி நேர பயிற்சியை முடித்து 25 மேடை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பிறகு அரங்கேற்றம் செய்திருப்பதாகவும், இதுவரை தான் 10 ஆயிரம் பெண்களுக்கு மேல் கும்மி பயிற்சி அளித்திருப்பதாகவும் கும்மி ஆசிரியர் நவீன் கூறினார்.

மேலும் வள்ளிக்கும்மி, பவளக்கும்மி, காத்தவராயன் கும்மி போன்ற பாரம்பரியமிக்க கலைகளை பயிற்றுவிக்க 3 ஆசிரியர்கள் மட்டுமே இருப்பதாகவும், தமிழ்நாடு அரசு பாடத்திட்டத்தில் இந்த கலையை பயிற்றுவிக்கச் செய்ய வேண்டும் என்றார்.

Tags

Next Story