தாராபுரத்தில் வள்ளிகும்மியாட்ட கலை நிகழ்ச்சி

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே 500 பேர் பங்கேற்ற வள்ளிகும்மியாட்ட கலை நிகழ்ச்சி நடந்தது.

தாராபுரம் அருகே 500, பேர் பங்கேற்ற வள்ளி கும்மியாட்ட கலை நிகழ்ச்சி பல்லாயிரக்கணக்கானோர் கண்டு களிப்பு! வள்ளி கும்மியாட்ட கலையை கற்று வரும் நபர்களுக்கு தமிழக அரசு ஊக்கத்தொகையை வழங்க கோரிக்கை! திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சங்கிலி ஸ்ரீ. ‌ கருப்பண்ணசாமி வள்ளி கும்மி கலை குழுவினர் சார்பில் குண்டடம் ஒன்றியம் எரகாம்பட்டி அருள்மிகு நல்லமங்கை உடனமர் மற்றும் நாகேஸ்வரசுவாமி திருக்கோவில் திருக்குட நன்னீராட்டு பெருவிழாவை யொட்டி கோவில் திடலில் வள்ளி கும்மியாட்டம் அரங்கேற்ற விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் ஒரே இடத்தில் 500 கலைஞர்கள் கொங்கு பாரம்பரிய வள்ளி கும்மியாட்டம் ஆடிவிநாயகர் துணையுடன் முருகப்பெருமானை திருமணம் செய்தது வரையிலான பாரம்பரிய நாட்டுப்புற பாடல்களை பாடியபடி நடன அசைவுகளுடன் நடனம் ஆடி அசத்தினர். இதைக் காண தாராபுரம், குண்டடம் ,மேட்டுக்கடை, குமாரபாளையம், பூளவாடி உள்ளிட்ட கிராமங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் வள்ளி கும்மியாட்டத்தை கண்டு களித்தனர்.

Tags

Next Story