வால்ராசாபாளையம் நடுநிலைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை
மாணவர் சேர்க்கை
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு ஒன்றியம், வால்ராசாபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இன்று (07.03.2024) 2024-25 ஆம் கல்வியாண்டிற்கான முதல் வகுப்பு மாணவர் சேர்க்கை சிறப்புமுகாம் நடைபெற்றது.
தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் மாணவர் சேர்க்கைக்காக விழிப்புணர்வு ஊர்வலம், பேரணி, துண்டுப்பிரசுரம் வினியோகித்தல், மாணவர் சேர்க்கைக்கான சிறப்புமுகாம் என பல்வேறு செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஐந்து வயதிற்குட்பட்ட மாணவர் சேர்க்கைக்கான சிறப்புமுகாம் பள்ளியின் தலைமையாசிரியர் திரு.செ.தங்கவேல் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. பள்ளியின் கணக்கெடுப்புப் பகுதிக்குட்பட்ட ஐந்து வயது நிறைவுபெற்ற 9 மாணவர்கள் இன்று பள்ளியில் முதல் வகுப்பில் சேர்க்கப்பட்டனர்.
பள்ளியின் ஆசிரியரியை திருமதி.கா.லட்சுமி வரவேற்புரை ஆற்றினார். இவ்விழாவில் பள்ளி மேலாண்மைக்குழுவைச் சார்ந்த திரு.வா.செ.கந்தசாமி, திரு.வி.சி.முனியப்பன், திரு.செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இச்சிறப்பான முகாமிற்கு நாமக்கல் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் திருமதி.ப.மகேஸ்வரி அவர்கள் காணொளி வாயிலாக தனது வாழ்த்துக்களைத்தெரிவித்தார்.
திருச்செங்கோடு வட்டாரக்கல்வி அலுவலர் திரு.லா.பிரபுக்குமார் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு புதிதாக பள்ளிசேர்ந்த மாணவ மாணவியருக்கு மாலை அணிவித்து வரவேற்று வாழ்த்து தெரிவித்து, பள்ளியின் சிறப்பம்சங்களைப்பற்றியும், அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு நலத்திட்டங்கள் பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார். ஆசிரியர் து.விஜய் முகாம் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார். ஆசிரியர் சு.பிரபு முகாமினை ஒருங்கிணைத்தார். இம்முகாமில் சாரண இயக்கத்தில் மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங்கில் நடைபெற்ற சர்வதேச அளவிலான முகாமில் தமிழகத்தின் சார்பில் பங்கேற்ற இப்பள்ளியின் சாரண இயக்க மாணவன் செ.சித்தார்த், தேசிய வருவாய்வழித் திறனாய்வுத்தேர்வில் பெற்றிபெற்றுள்ள மாணவர் மோ.சஞ்சய் ஆகியோருக்கு பாராட்டப்பட்டனர்
. பள்ளி மேலாண்மைக்குழுத் தலைவர் திருமதி.ரேணுகா, பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் திரு.நாகராஜன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தொடர்ந்து பள்ளியில் புதிதாக சேர்ந்துள்ள மாணவ மாணவியருக்கு பள்ளியின் சாரண இயக்கத்தின் சார்பில் வரவேற்பளிக்கப்பட்டது. ஆசிரியை திருமதி.ச.விமலா நன்றி உரை கூறினார்.
இதற்கான ஏற்பாடுகளை பள்ளியின் ஆசிரியர்கள் திருமதி.சி.கவிதா, திருமதி.பொ.நித்யா,திருமதி.நிவேதா மற்றும் பள்ளியின் சாரண இயக்கப் மாணவர்கள் ஆகியோர் அடங்கிய குழு சிறப்பாகச் செய்திருந்தது.