வல்வில் ராமர் கோவில் தேரோட்டம் - திரளான பக்தர்கள் பங்கேற்பு
புள்ளம்பூதங்குடி வல்வில் ராமர் கோவில் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு திருத்தேரினை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா அஹோபில மடம் பரம்பரை ஆதீனதிற்க்கு சொந்தமான வல்வில் ராமர் கோவில் புள்ளம்பூதங்குடியில் அமைந்துள்ளது பாடல் பெற்ற ஸ்தலமான இக்கோவிலில் திருத்தேரோட்ட விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. அது சமயம் கோயில் வளாகத்தில் இருந்து திரளான பக்தர்கள் திருத்தேரினை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர் முக்கிய வீதிகள் வழியாக சென்ற திருத்தேர் கோவிலை வந்தடைந்தது.பின்னர் சாமிக்கு சிறப்பு அர்ச்சனை தீபா தாரனை நடைபெற்றது விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் புள்ளம்பூதங்குடி வல்வில் ராமர் கோவில் நிர்வாக அதிகாரி ரங்கராஜன் செய்திருந்தார்.
Next Story