பெரம்பலூர் அருகே வேன்-ஆம்னி பேருந்து மோதல்: 15 பேர் காயம்

பெரம்பலூர் அருகே வேன்-ஆம்னி பேருந்து மோதல்: 15 பேர் காயம்

விபத்தில் சிக்கிய பேருந்து

பெரம்பலூர் அருகே வேன்மீது ஆம்னி பேருந்து மோதிய விபத்தில் 15 பேர் காயம் அடைந்தனர்.

இலங்கை நாட்டின் துரேலியா மாவட்டம் பொகவத்தலாவ பகுதியைச் சேர்ந்தவர்கள் சிலர், இலங்கையில் இருந்து, சென்னை வந்து அங்கிருந்து பயணிகள் வேன் மூலமாக மதுரை சென்று பிறகு சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்வதற்காக திட்டமிட்டிருந்தனர். அதன் படி பயணிகள் வேன் ஒன்றில் சென்னையில் இருந்து மதுரை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

இவர்கள் வந்த வாகனம் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் அருகே உள்ள விஜயகோபாலபுரம் கிராமம் பிரிவு பாதை அருகே இன்று காலை வந்து கொண்டிருந்த பொழுது திடீரென வேனின் டயர் பஞ்சரானது.

இதனையடுத்து வேன் சக்கரத்தை மாற்றுவதற்கான ஜாக்கி இல்லாததால், அவ்வழியே வரும் வாகனங்களை மறித்து உதவி கேட்டுள்ளனர். அப்போது சென்னையில் இருந்து திருச்சி துவாக்குடிக்கு மின்சார வாரிய பொருட்களை ஏற்றி வந்த மினி லோடு வேன் ஓட்டுநரான திண்டிவனத்தைச் சேர்ந்த விஸ்வாகேது , என்பவர், பழுதான வேனுக்கு முன்னால், சென்று தனது லோடு வேனை நிறுத்தி, ஜாக்கி கொடுத்து உதவியுள்ளார்.

மேலும் டயரை மாற்றுவதற்கு உதவியாக அருகே நின்று கொண்டிருந்துள்ளார். அப்போது சென்னையில் இருந்து கம்பம் நோக்கி வந்த தனியார் ஆம்னி பேருந்து பஞ்சராகி நின்று கொண்டிருந்த பயணிகள் வேன் மீது எதிர்பாரால் வேகமாக மோதியது.

இந்த விபத்தில் அதற்கு முன்னால் ஜாக்கி கொடுத்து விட்டு நின்ற லோடு வேன் மீது மோதி, சாலையின் சென்டர் மீடியலின் ஏறி நின்றது. வாகனங்கள் மீது மோதிய வேகத்தில் கட்டுப்பாட்டை இழந்த தனியார் ஆம்னி பேருந்து சாலை ஓரத்தில் இருந்த பள்ளத்தில் இறங்கி, அங்கிருந்த மரத்தின் மீது மோதி நின்றது.

இந்த சம்பவத்தில் பயணிகள் வேன் மீது அமர்ந்திருந்த இலங்கையை நாட்டைச் சேர்ந்த மருதம்பாள்(70) கனகநாதன்- 32 லோகேஸ்வரன்-30 மற்றும் ஆம்னி பேருந்து ஓட்டுனர் தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ். 33 ,உள்ளிட்ட 15 பேர் காயமடைந்தனர்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த பாடலூர் போலீசார் விரைந்து சென்று காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story