வேன் கவிழ்ந்து விபத்து - 8 பேர் காயம்

வேன் கவிழ்ந்து விபத்து  - 8 பேர் காயம்
காவல் நிலையம் 
விருதுநகர் அருகே நடுவப்பட்டி சந்திப்பில் கேரள கலைக்குழுவை சேர்ந்தவர்கள் சென்ற வேன் கவிழ்ந்த விபத்தில் 8 பேர் காயமடைந்தனர்.

கேரளா மாநிலம் திருவனந்தபுரம் பகுதியைச் சார்ந்தவர் முகேஷ். இவர் கலைக்குழு நடத்தி வருவதாக கூறப்படுகிறது இவர் கடந்த 11ஆம் தேதி மதுரை திருப்பரங்குன்றத்தில் உள்ள தனியார் மஹாலில் கலை நிகழ்ச்சி நடத்தி முடித்துவிட்டு வானில் தனது கலைக்குழுவினருடன் விருதுநகர் சாத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த பொழுது வேனை கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தைச் சார்ந்த ஆனந்த் என்பவர் ஓட்டி வந்ததாக கூறப்படுகிறது.

அந்த வேன் நடுவப்பட்டி விளக்கு அருகே சென்று கொண்டிருந்த பொழுது, பாலத்தின் இடது பக்க சுவற்றில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் கலைக் குழுவைச் சார்ந்த ஆனந்த், ஸ்வேதா, முகேஷ்,ராகுல் ஹிஸ்டரியானா, சரத்,ரியலி ரோஷினி ஆகிய எட்டு பேர் காயமடைந்தனர். அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் விபத்து குறித்து காயம் அடைந்த முகேஷ் அழித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story