பட்டுக்கோட்டை அருகே வேன் டயர் வெடித்து விபத்து: ஒருவர் பலி
விபத்துக்குள்ளான வேன்
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பண்டிகை சோழநல்லூர் என்ற கிராமத்தில் இருந்து பட்டுக்கோட்டை அடுத்த ஊரணிபுரத்திற்கு துக்க நிகழ்ச்சிக்காக 15 க்கும் மேற்பட்டவர்கள் வேனில் வந்துள்ளனர். பட்டுக்கோட்டை அருகே சூரப்பள்ளம் என்ற இடத்தில் வரும்போது திடீரென டயர் வெடித்ததால் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து வேன் நடுரோட்டிலேயே கவிழ்ந்தது.
இதில் பயணம் செய்த அனைவருமே கை, கால், தலை முதுகு, முகம் என படுகாயம் அடைந்தனர். விபத்து நடந்ததும் அங்கிருந்தவர்கள் ஓடிச் சென்று அவர்களை மீட்டு, 108- ஆம்புலன்ஸ் மூலம் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்தில் சிக்கி சிகிச்சை பலனின்றி திருமணமாகி சில மாதங்களே ஆன சண்முகம் (38) என்பவர் உயிரிழந்தார். மேலும் மேகநாதன் (24), ரெஜினா (24), ,பிரசாத் (31), தங்கையன் (49), கருப்பையா (80), காளிமுத்து (19), முனியம்மா (55), சக்திவேல் (24), பிரேமா (33), முத்துலட்சுமி (40), உள்பட 15 நபர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.
இவர்களுக்கு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிலர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.