தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் வனாமி இறால் வளர்ப்பு பயிற்சி முகாம்

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் வனாமி இறால் வளர்ப்பு பயிற்சி முகாம்

பயிற்சியில் கலந்து கொண்டவர்கள் 

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் "வனாமி இறால் வளர்ப்பு" குறித்து மூன்று நாள் தொழில்நுட்ப செயல் விளக்கப் பயிற்சி அளிக்கப்பட்டது.

தமிழ்நாடு டாக்டர். ஜெ. ஜெயலலிலதா மீன்வளப் பல்கலைக் கழகத்தின் ஓர் அங்கமான மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தூத்துக்குடியில் "வனாமி இறால் வளர்ப்பு" என்ற தலைப்பில் மீனவ சமூகத்திற்கு வழங்குவதற்காக பயிற்சி இன்று துவக்கி வைக்கப்பபட்டது.

இப்பயிற்சியானது இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் கீழ் இயங்கும் மத்திய மீன்வளக் கல்வி நிலையத்தின் பட்டியல் இன சமூகம் மற்றும் பகுதிதிட்டம் நிதியுதவியுடன் நடைபெற்றது. இதில் தூத்துக்குடி மாவட்ட ஊரக பகுதியைச் சேர்ந்தபட்டியல் இன சமூகத்தை சார்ந்த மொத்தம் 25 மீனவர்களுக்கு வழங்கப்படுகிறது.

இப்பயிற்சியினை மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின், மீன்வள விரிவாக்கம், பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை நடத்துகிறது. இந்நிகழ்ச்சியினை நபார்டு வங்கி, (திருநெல்வேலி தொகுப்பு) உதவி பொது மேலாளர், ஆர்.கே.சுரேஷ் இராமலிங்கம், துவக்கி வைத்து நபார்டு வங்கியின் பல்வேறு திட்டங்கள் குறித்தும் பயிற்சிகள் குறித்தும் சிறப்புரை ஆற்றினார். இந்நிகழ்ச்சியினை தூத்துகுடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதல்வர் ப.அகிலன், துவக்கி வைத்து இப்பயிற்சியின் முக்கியத்துவத்தையும், ஏற்கனவே இது போன்ற பயிற்சி பெற்ற பயனாளிகள் இறால் வளர்ப்பு சார்ந்ததொழில் தொழில் முனைவோர்களாக உருவாகி வளர்ந்து வருகிறார்கள் என்றும் கல்லூரியின் ஆலோசனைகளை பெற்று பயிற்சியாளர்கள் பயனைடயுமாறு அறிவுறுத்தினார். இப்பயிற்சியில் பயிற்சியாளர்களுக்கு இறால் பண்ணை அமைப்பதற்கான இடத்தேர்வு, பண்ணை அமைத்தல் முறைகள், குளங்கள் தயாரித்தல் மற்றும் மேலாண்மை முறைகள், இறால் வளர்ப்பு குளங்களின் நீர்த்தர மேலாண்மை, தரமான இறால் குஞ்சுகளை பொரிப்பகங்களில் தேர்வு செய்தல் மற்றும் இருப்பு செய்தல், இறால் வளர்ப்பில் தீவன மேலாண்மை, இறால் வளர்ப்பில் ஏற்படும் நோய்களை கண்டறிதல் மற்றும் மேலாண்மை முறைகள், இறால் வளர்ப்பில் உயிர் பாதுகாப்பு மேலாண்மை மற்றும் இறால் வளர்ப்பில் சந்தை நிலவரம் அறிதல் மற்றும் சந்தைப்படுத்துதல் முறைகள் குறித்த செயல் விளக்கப்பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது. மீன்வள விரிவாக்கம், பொருளியில் மற்றும் புள்ளியியல் துறையின் பேராசிரியர் மற்றும் தலைவர் சுஜாத்குமார் வரவேற்றார். மீன்வளவிரிவாக்கம், பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறையின் உதவிப் பேராசிரியர் மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளர் கோ. அருள் ஒளி, நன்றியுரை ஆற்றினார்.

Tags

Next Story