வாண்டாகோட்டை ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா!
கும்பாபிஷேகம்
ஆலங்குடி அருகே உள்ள வாண்டா கோட்டை ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா இன்று விமரிசியாக நடைபெற்றது புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வாண்டாகோட்டை கிராமத்தில் அமைந்துள்ள கற்பக விநாயகர் கும்பாபிஷேக விழா நடத்த திட்டமிடப்பட்டு அதற்கான திருப்பணி வேலைகள் கடந்த இரண்டு வருடங்களாக நடைபெற்று வந்தது.திருப்பணி வேலைகள் முடிந்து அதன் தொடர்ச்சியாக இன்று அக்கோயில்களின் கும்பாபிஷேக விழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.
கோயில் நிர்வாகிகள் மற்றும் ஊரார்கள் ஏற்பாட்டில் கடந்த மூன்று தினங்களாக கணபதி ஹோமம் உள்ளிட்ட சிறப்பு ஹோமங்கள் சிவாச்சாரியர்களால் செய்யப்பட்டு இன்று காலை யாகசாலையில் இருந்து புனித நீரானது கற்பக விநாயகர் ஆலயத்திற்கு கொண்டுவரப்பட்டு கருட வாகனத்தில் வட்டமிட கோயில் கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டது.
அதன்பின்பு கற்பக விநாயகருக்கு தீப ஆராதனை மற்றும் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டது. இந்த கும்பாபிஷேக நிகழ்வில் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு கற்பக விநாயகர் அருள்பெற்று சென்றனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை வாண்டாகோட்டை கிராம பொதுமக்கள் செய்திருந்தனர் பாதுகாப்பு ஏற்பாடுகளை வல்லத்திரக்கோட்டை காவல்துறையினர் செய்தனர்.