வந்தவாசி :அரசு பள்ளிகளில் குழந்தைகள் தின விழா
குழந்தைகள் தின விழா
முன்னாள் இந்திய பிரதமரும் இந்திய சுதந்திர போராட்ட வீரருமான ஜவஹர்லால் நேரு பிறந்த தினமான நவம்பர் 14 இந்தியாவெங்கும் குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த கல்லாங்குத்து ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் குழந்தைகள் தினவிழா தலைமை ஆசிரியர் கண்ணகி தலைமையில் நடைபெற்றது. ஆசிரியை சா.ரஷீனா முன்னிலை வகித்தார். நேருவின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. குழந்தைகள் தின விழா என பொறிக்கப்பட்ட கேக்கை தொடக்கப்பள்ளி மாணவி வெட்டினார். ஆசிரியைகளுக்கும், மாணவிகளுக்கும் கேக் பகிர்ந்து அளிக்கப்பட்டது. நேருவை குறித்து மாணவ,மாணவியர் பேசினர். இறுதியாக, ஆசிரியை மாலதி நன்றி கூறினார். இதேபோல், சென்னாவரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் குழந்தைகள் தினவிழா ஊராட்சி மன்றத் தலைவர் வீரராகவன் தலைமையில் நடைபெற்றது. ஸ்ரீகிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா.சீனிவாசன் முன்னிலை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியை சசிகலா வரவேற்றார். மாணவர்கள் பங்கேற்ற குழந்தைகள் தின பல்திறன் போட்டிகளில் சிறப்பிடம் பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் பள்ளி நூலகத்திற்கு பல்துறை சார்ந்த 30 புத்தகங்கள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் எக்ஸ்னோரா கிளை தலைவர் மலர் சாதிக், இரயில்வே துறை அலுவலர் தனசேகரன், கவிஞர் வந்தை குமரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இறுதியில் பள்ளி பட்டதாரி ஆசிரியர் சீனுவாசன் நன்றி கூறினார்.
Tags
Next Story