வந்தவாசி ஒன்றியக் குழுக் கூட்டம் - தீர்மானங்கள் நிறைவேற்றம்

வந்தவாசி ஒன்றியக் குழுக் கூட்டம் - தீர்மானங்கள் நிறைவேற்றம்
ஒன்றிய குழு கூட்டம் 
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி ஊராட்சி ஒன்றியக் குழுவின் சாதாரணக் கூட்டத்தில் தலைவர் எ.ஜெயமணி ஆறுமுகம் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. ஊராட்சி ஒன்றிய அலுவலகத் தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் கள் ந.ராஜன்பாபு, தசரதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கீழ்சீசமங்கலம் கிராமத்தில் சேதமடைந்துள்ள மேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டியை இடித்து அகற்றிவிட்டு புதிய நீர்த்தேக்கத்தொட்டி கட்டித்தர வேண்டும் என்று உறுப்பினர் பி.சக்திவேல் பேசினார். மேலும் வந்தவாசி- மேல் மருவத்தூர் சாலை, கீழ்சீசமங்கலம் கூட்டுச் சாலையில் அதிகளவில் விபத்துகள் நிகழ்வதைத் தடுக்க நெடுஞ்சாலைத் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். மும்முனி ஊராட்சியில் மேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டியை குளோரினேஷன் செய்து தூய்மைப்படுத்த வேண்டும் என்று உறுப்பினர் சுகந்தி வேலு கோரிக்கை விடுத்தார். இதைத் தொடர்ந்து பேசிய ஒன்றியக் குழுத் தலைவர் எ.ஜெயமணி ஆறுமுகம், உறுப்பினர்களின் கோரிக்கைகள் மற்றும் புகார்கள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். பின்னர், பல்வேறு வளர்ச்சிப் பணிகளை நிறைவேற்றுவது தொடர்பான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags

Next Story