சென்னை-கோவை இடையே வந்தே பாரத் சிறப்பு ரயில் இயக்கம்

சென்னை-கோவை இடையே வந்தே பாரத் சிறப்பு ரயில் இயக்கம்

வந்தே பாரத் ரயில்

சென்னை-கோவை இடையே வந்தே பாரத் சிறப்பு ரயில் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேலம் ரெயில்வே கோட்டம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சென்னை- கோவை இடையே சேலம், ஈரோடு வழியாக வந்தே பாரத் சிறப்பு ரெயில் வாரத்தில் ஒரு நாள் இயக்கப்படுகிறது.

அந்த வகையில் சென்னை- கோவை இடையே இருமார்க்கத்திலும் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) மற்றும் 12-ந் தேதிகளில் வந்தே பாரத் சிறப்பு ரெயில் சேவை நீட்டிப்பு செய்துள்ளதாக ரெயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது, அதன்படி சென்னை- கோவை வந்தே பாரத் சிறப்பு ரயில் (வண்டி எண் 06035) 5, 12 ஆகிய தேதிகளில் சென்னை சென்ட்ரல் ெரயில் நிலையத்தில் இருந்து காலை 7.10 மணிக்கு புறப்பட்டு காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாக காலை 11.23 மணிக்கு சேலம் வந்தடையும். பின்னர் இங்கிருந்து 11.25 மணிக்கு புறப்பட்டு ஈரோடு,

திருப்பூர் வழியாக மதியம் 2.15 மணிக்கு கோவையை சென்றடையும். இதேபோல் மறு மார்க்கத்தில் இயக்கப்படும் கோவை- சென்னை சென்ட்ரல் வந்தே பாரத் சிறப்பு ரெயில் (வண்டி எண் 06036) 5, 12-ந் தேதிகளில் கோவையில் இருந்து மாலை 3.05 மணிக்கு புறப்பட்டு திருப்பூர், ஈரோடு வழியாக மாலை 5.18 மணிக்கு சேலம் வந்தடையும்.

பின்னர் இங்கிருந்து 5.20 மணிக்கு புறப்பட்டு ஜோலார்பேட்டை, காட்பாடி வழியாக இரவு 9.50 மணிக்கு சென்னை சென்ட்ரல் சென்றடையும், இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story