திண்டுக்கல் வழியாக பெங்களூரு செல்ல வந்தேபாரத் ரெயில்.!!
வந்தேபாரத் ரெயில்
திண்டுக்கல் வழியாக பெங்களூரு செல்ல வந்தேபாரத் ரெயிலை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென வர்த்தகர் சங்கம் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திண்டுக்கல் வர்த்தகர் சங்கம் சார்பில் தென்னக ரெயில்வே பொதுமேலாளர் மற்றும் டிவிஷனல் மேனேஜர் ஆகியோருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது, திண்டுக்கல் மாவட்டம் தென் தமிழகத்தின் வளர்ந்து வரும் தொழில் நகரமாக உள்ளது. திண்டுக்கல்லை சுற்றி 30 கி.மீ. சுற்றளவில் உள்ள பகுதிகளில் தொழில்துறை, ஐ.டி. நிறுவனங்கள் சம்மந்தமாக வேலை வாய்ப்புகள் அதிகமாக உருவாகி வருகிறது. திண்டுக்கல் வழியாக நாள் ஒன்றுக்கு ஒரு ரெயில் மட்டுமே பெங்களூரு செல்கிறது. அதிலும் 95 சதவீதம் 1 சீட் கூட கிடைப்பதில்லை. இதனால் பெரும்பாலானோர் அதிக பணம் கொடுத்து பஸ்சில் செல்ல வேண்டியுள்ளது. இதனால் தேவையற்ற வீண் செலவும், கால விரையமும் ஏற்படு கிறது. எனவே திண்டுக்கல் வழியாக பெங்களூரு செல்ல வந்தேபாரத் ரெயிலை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பகல் நேரத்தில் செல்லக்கூடிய பாசஞ்சர் விரைவு ரெயில் ஒன்றும் இயக்க அறிவிப்பு வெளியிட வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
Tags
Next Story