வண்டி காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

வண்டி காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

கும்பாபிஷேக விழா

வண்டி காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே ஆத்தூர் நந்தனார் தெருவில் உள்ள வண்டிகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவினை முன்னிட்டு சுத்தி புண்யாக வாசனம், பிரவேசபலி, வாஸ்த்து சாந்தி பூஜை, அஷ்டதிக் பாலகர்கள் பூஜைகள் நடைபெற்றது. நேற்று மாலை 7.30 மணிக்கு மேல் யாக சாலையில் தோரண பூஜை. சிவசக்தி வழிபாடு, யாகசாலை பரிவார தேவதைகள் பூஜை, வேதிகை, ரக்சாபந்தனம், காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. 2-வது நாளாக சின்ன வண்டி காளியம்மன் மற்றும் சிம்ம வாகனத்திற்கும் யந்திர பிரதிஷ்ட்டை மற்றும் அஷ்டபந்தன சாற்று நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை தொடர்ந்து பல்வேறு பூஜைகள் செய்யப்பட்ட புனித நீரை கோவில் கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். தொடர்ந்து கோவில் வளாகம் முழுவதும் கூடிருந்த பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக வந்து சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை நந்தனார் தெரு கிழக்குப் பகுதியில் உள்ள ஊர்பொதுமக்கள் மற்றும் நந்தனார் கிழக்குத் தெரு இளைஞர் அணியினர் செய்திருந்தனர். விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags

Next Story