வாணியம்பாடி : காங்கிரஸ் கட்சியினர் சாலைமறியல்

வாணியம்பாடி :  காங்கிரஸ் கட்சியினர் சாலைமறியல்

சாலை மறியல் 

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வாணியம்பாடி பேருந்து நிலையத்தில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுப்பட்ட காங்கிரஸ் கட்சியினர் 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

நாடாளுமன்றத்தில் கடந்த 13ஆம் தேதி பார்வையாளர் மாடத்தில் இருந்த இருவர் வண்ண புகை குப்பிகள் வீசி தாக்குதல் நடத்தியது தொடர்பாக எதிர்க்கட்சிகள் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் விவாதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்து அமலில் ஈடுபட்டதால் எதிர்க்கட்சி எம்பிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர், காங்கிரஸ், திமுக, மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் என மக்களவையை சேர்ந்த 95 எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மற்றும் மாநிலங்களவையைச் சேர்ந்த 46 எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் இந்நிலையில் நாடாளுமன்றத்தில் எம்பிகள் இடைநீக்கம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பேருந்து நிலையத்தில் திருப்பத்தூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் பிரபு தலைமையில் சுமார் 100 க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர், பின்னர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களை கைது செய்த காவல்துறையினர் அவர்களை தனியார் மண்டபத்திற்கு அழைத்துச்சென்றனர்.

Tags

Next Story