வாணியம்பாடி : தென்னையை தாக்கும் மர்ம நோய் - அதிர்ச்சியில் விவசாயிகள்

வாணியம்பாடி : தென்னையை தாக்கும் மர்ம நோய் - அதிர்ச்சியில் விவசாயிகள்

காய்ந்து போன தென்னை மரம் 

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியில் தென்னை இலை சரகு நோய் பரவுவதால் தென்னை விவசாயிகள் கடும் வேதனை அடைந்துள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி தாலுகாவிற்கு உட்பட்ட திம்மம்பேட்டை பகுதியில் தென்னை மரத்திற்கு சரகு நோய் ஏற்பட்டு பரவி வருவதால் விவசாயிகள் கடும் வேதனை அடைந்து வருகின்றனர். திம்மம்பேட்டை பகுதியைச் சேர்ந்த விவசாயி பங்காரு கூறுகையில், நான் என்னுடைய நிலத்தில் 2 ஏக்கர் பரப்பளவில் உள்ள 200 தென்னை மரத்தை வளர்த்து தேங்காய் அறுவடை செய்து வருகின்றேன். இந்நிலையில் திடீரென்று இரண்டு மாதங்களுக்கு முன்பு மர்மமான முறையில் தென்னை ஓலை முற்றிலும் காய்ந்து வருகிறது. இது குறித்து நாட்றம்பள்ளி வேளாண்மை துறை அரசு அதிகாரிகளுக்கு கூறினேன். எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றச்சாட்டு முன்வைக்கின்றனர் அந்த பகுதியில் இருக்கும் தென்னந்தோப்பிற்கு நோய் தொற்று பரவி சேதம் ஏற்படாமல் தடுக்க துறையை சேர்ந்த அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை முன்வைக்கின்றனர்.

Tags

Next Story