வி.ஏ,ஓ., உதவியாளருக்கு கன்னத்தில் அடி

X
விஏஓ உதவியாளருக்கு கன்னத்தில் அடி
கிரையம் செய்த பத்திரத்திற்கு பட்டா கேட்டபோது, கிராம நிர்வாக அலுவலரின் உதவியாளருக்கு கன்னத்தில் அடி - போலீசார் வழக்குபதிவு
மல்லசமுத்திரம் அருகே, வட்டூர் கிராமம், தண்ணீர்பந்தல்பாளையம் பகுதியை சேர்ந்தர் பழனியப்பன் மகன் சரவணன்19. கடந்த 12வருடங்களாக, அப்பகுதியில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை 4.30மணியளவில், வட்டூர் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் வேலை செய்துகொண்டிருக்கும்போது வெளியே யாரோ சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்தபோது, வட்டூர் கஸ்பா பகுதியை சேர்ந்த மைக்செய் தொழில் செய்துவரும் மாரப்பன் சசிக்குமார்31 மற்றும் சிலர் சரவணணை பார்த்து, ஏன்டா எனக்கு நீ பட்டா தரமாட்டியா என கேட்டு தகாத வார்த்தையால் திட்டியுள்ளனர். மேலும், சரவணனில் கை, இடது கன்னத்தில் ஓங்கி அடித்துள்ளனர். சரவணன் சத்தமிட்டதால், அருகிலிருந்தவர்கள் வந்துள்ளனர். இன்று தப்பிவிட்டாய் என்று இருந்தாலும் உன்னை கொல்லாமல் விடமாட்டேன் என்று கூறிவிட்டு சசிக்குமார் சென்றுவிட்டார். சரவணன் திருச்செங்கோடு அரசுமருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், சசிக்குமார் கடந்த மூன்று வருடத்திற்கு முன்னர் கிரையம் செய்த 2500சதுரடி நிலத்திற்கு பட்டா கேட்டபோது, கிராம நிர்வாக அலுவலரின் உதவியாளர் சரவணன் தகாதவார்த்தையால் திட்டிதாகவும், சசிக்குமாரின் உயிர் நாடியில் வலது காலிலால் சரவணன் எட்டி உதைத்ததாகவும் கூறி, திருச்சேங்கோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சரவணன், சசிக்குமார் இருவரும் ஒருவரையொரும் தகாத வார்த்தையால்திட்டி, மாறிமாறி தாக்கிகொண்டது குறித்து, மல்லசமுத்திரம் போலீசார் இருவர் மீதும் நேற்று, வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
