வி.ஏ.ஓ.,கள் கண்டன ஆர்ப்பாட்டம்

வி.ஏ.ஓ.,கள் கண்டன ஆர்ப்பாட்டம்

 நத்தம் தாலுகா அலுவலகம் முன்பு டிஜிட்டல் சர்வே பணிக்கான உபகரணங்களை வழங்க கோரி விஏஓ.,கள் கருப்பு பேட்ஜ் அணிந்தவாறு ஆர்ப்பாட்டம் செய்தனர். 

நத்தம் தாலுகா அலுவலகம் முன்பு டிஜிட்டல் சர்வே பணிக்கான உபகரணங்களை வழங்க கோரி விஏஓ.,கள் கருப்பு பேட்ஜ் அணிந்தவாறு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தாலுகா அலுவலகம் முன்பு டிஜிட்டல் சர்வே பணிக்கான உபகரணங்களை வழங்க கோரி விஏஓக்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு விஏஓக்கள் சங்கத் தலைவர் சுரேந்திரன் தலைமை தாங்கினார் பொருளாளர் சரவணன் முன்னிலை வகித்தார். நத்தம் தாலுகாவில் உள்ள வருவாய் கிராமங்களில் டிஜிட்டல் சர்வே பணிகளில் ஈடுபட்டு வரும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு டிஜிட்டல் சர்வே பணிகளுக்கான உபகரணங்கள் ஏதும் வழங்கப்படாததை கண்டித்து கோஷம் எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் நத்தம் தாலுகாவில் உள்ள விஏஓக்கள் அனைவரும் கலந்து கொண்டனர். முடிவில் செயலாளர் மணிகண்டன் நன்றி கூறினார்.

Tags

Next Story