வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
X
கொடியேற்றத்துடன் தொடக்கம்
வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

காஞ்சிபுரம் வரதராஜ சுவாமி கோவில் வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. பழமையும் வரலாற்று சிறப்பும் மிக்கது காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜ சுவாமி திருக்கோவில்.இக்கோயிலில் வைகாசி திருவிழாவையொட்டி அதிகாலையில் கொடியேற்றம் நடைபெற்றது.

கொடியேற்றத்தை முன்னிட்டு கோவில் கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேகங்கள், தீபாரதனைகள் நடைபெற்றன. கருடாழ்வார் ஓவியம் பொறித்த கொடியானது கோயில் கொடி மரத்தில் ஏற்றப்பட்டு தீபாராதனைகள் நடைபெற்றன.

கொடியேற்றத்தின் போது ஸ்ரீதேவி பூதேவி சமேதராக உற்சவர் வரதராஜ பெருமாள் வெங்கடாத்திரி கொண்டை அலங்காரத்தில் வைர வைடூரிய ஆபரணங்களும் அணிந்து சிறப்பு அலங்காரத்தில் கோயில் கொடிமரம் அருகே உள்ள தேசிகர் சந்நிதிக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

வான வேடிக்கைகளும் நடைபெற்றன. கொடியேற்றம் முடிந்ததும் பெருமாள் தங்கச் சப்ரத்தில் வீதி உலா வந்தார். விழாவையொட்டி தினசரி காலையிலும், மாலையிலும் வெவ்வேறு வாகனங்களில் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாளிக்க உள்ளார். வரும் 22 ஆம் தேதி கருட வாகன சேவையும், 26 ஆம் தேதி மகாரதம் எனும் தேரோட்டமும் நடைபெறுகிறது. வரும் 28ஆம் தேதி தீர்த்தவாரியும் மறுநாள் 29ஆம் தேதி இரவு வெட்டிவேர் சப்பரத்தில் பெருமாள் வீதி உலா வரும் நிகழ்வோடும் வைகாசி திருவிழா நிறைவு பெறுகிறது.

விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் சீனிவாசன், மணியக்காரர் கிருஷ்ணகுமார் தலைமையிலான கோயில் பட்டாச்சாரியார்கள், கோயில் பணியாளர்கள் செய்துள்ளனர். விழாவையொட்டி ஆலயம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

Tags

Next Story