வராஹி அம்மன் ஐம்பொன் சிலை
ஐம்பொன் சிலை
கள்ளகுறிச்சி மாவட்டம், சின்னசேலம் கங்காதீஸ்வரர் கோவிலில் வராஹி அம்மன் ஐம்பொன் உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் வீதிஉலா நடைப்பெற்றது.
சின்னசேலம் கங்காதீஸ்வரர் கோவிலில் புதிதாக வராஹி அம்மன் ஐம்பொன் சிலை வைக்கப்பட்டது. சின்னசேலம் கங்காதீஸ்வரர் கோவிலில் வராஹி அம்மனுக்கு தனி சன்னிதானம் உள்ளது. கோவில் நிர்வாகம் சார்பில் அம்மனுக்கு ஐம்பொன் உற்சவர் சிலை செய்ய முடிவு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து கும்பகோணத்தில் வராஹி அம்மன் ஐம்பொன்னால் வடிவமைக்கப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடந்தது. தொடர்ந்து சன்னிதானத்தில் அம்மன் உற்சவர் சிலை வைக்கப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
Next Story