இந்தியா கூட்டணியில் பல்வேறு குழப்பங்கள்: எடப்பாடி பழனிசாமி

இந்தியா கூட்டணியில் பல்வேறு பிரதமர் வேட்பாளர் தேர்வில் பல்வேறு குழப்பங்கள் உள்ளது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தில் அதிமுக துணை பொது செயலாளர் கே பி முனுசாமி அவர்களின் தந்தை பூங்காவனம் மறைவையொட்டி அவரது படத்திற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மலர் தூவி மரியாதை செலுத்தி ஆறுதல் தெரிவித்தார்


பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, இந்திய வானிலை மையம் மிக்ஜாம் புயல் தொடர்பாக முன்னதாகே எச்சரிக்கை விடுத்தும் தமிழக அரசு தேவையான முன் எச்சரிக்கை பணிகள் செய்யவில்லை, நிவாரண பணிகளையும் சரியாக மேற்கொள்ளவில்லை, அதேபோல் தென்மாநிலங்களிலும் அரசு எந்த முன் எச்சரிக்கை மற்றும் மீட்பு பணிகள் செய்யவில்லை மக்கள் உணவு தண்ணீர் பால் இன்றி தவித்து வருவதாக கூறுகின்றனர்.

அதிமுக ஆட்சியில் செய்யப்பட்ட கால்வாய் அமைப்பு பணிகளால் தான் தற்போது தண்ணீர் வடிந்து செல்கிறது. அதிமுக ஆட்சியில் தேவையான முன் எச்சரிக்கை பணிகள் செய்யப்பட்டு உடனுக்குடன் மின்சாரம் உணவு மீட்பு பணிகள் செய்யப்பட்டது. திமுக அரசு இரண்டரை ஆண்டுகளில் எந்த ஒரு திட்டமும் செய்யாமல் கமிஷன் மட்டும் பெறும் அரசாக திராவிட மாடல் அரசு உள்ளது. தமிழக முதலமைச்சர் தேவையான முன் எச்சரிக்கை பணிகளை செய்யாமல் தவறு செய்து விட்டது.

அதனை மறைக்க இந்திய வானிலை மையம் மீது பழி போடுகிறார்கள்... 141 எம்.பி.கள் சஸ்பென்ஸ் நடவடிக்கையில், நாடாளுமன்ற மன்றத்தில் என்ன நடந்தது என தெரியவில்லை, இந்திய கூட்டணியில் ஒன்றை கருத்துள்ள கட்சிகள் இல்லை 26 கட்சிகள் உள்ளது. மம்தா, அரவிந்த் கெஜ்ரிவால் இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் கார்கே என சொல்கின்றனர்

ஆனால் கார்வே பிரதமர் வேட்பாளர் முக்கியம் அல்ல தேர்தலுக்கு பிறகு என கூறுகிறார்.. அதே இந்தி தெரிந்திருக்கவேண்டும் என கருத்துக்கள் வருகிறது. பல்வேறு குழப்பம் நிலவுகிறது. இந்தியா கூட்டணியின் அடுத்த கூட்டம் நடைபெறுமா? இருக்குமா? இருக்காதா? என்பதே சந்தேகமாக, உள்ளது. திமுகவில் இன்னும் பல அமைச்சர்கள் ஊழல் வழக்கில் கைது செய்யப்படுவார்கள், திமுக ஊழல் கட்சி கடந்த இரண்டரை ஆண்டுகளாக ஊழல் செய்து வருகிறது. திமுக ஆட்சியில் தமிழகம் பாதாளத்தில் சென்று விட்டது.

தமிழக முதலமைச்சர் எதற்கு எடுத்தாலும் குழு போடுகிறார். இந்த திமுக அரசு குழு அரசாக செயல்படுகிறது. என தெரிவித்தார்... பேட்டியின் போது முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, தங்கமணி,வேலுமணி, கே.பி.அன்பழகன், பாலகிருஷ்ணரெட்டி, சரோஜா, ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags

Next Story