அம்பேத்கர் சிலைக்கு பல்வேறு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை

அம்பேத்கர் சிலைக்கு பல்வேறு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை

அம்பேத்கர் நினைவு தினம் 

டாக்டர் அம்பேத்கரின் 67 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு டிசம்பர் 6ஆம் தேதி பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திமுக, நாம் தமிழர் கட்சி, மதிமுக, அம்பேத்கர் மன்றம், பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி பகுஜன் சமாஜ் உள்ளிட்ட பல்வேறு கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் உறுப்பினர்கள் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து, வீரவணக்க கோஷமிட்டு மௌன அஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சியில் திமுக, விசிக, பாட்டாளி மக்கள் கட்சி, மதிமுக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சியை சேர்ந்த நிர்வாகிள் தொண்டர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story