வளர்பிறை ஏகாதசி  சிறப்பு வழிபாடு

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் வளர்பிறை ஏகாதசியையொட்டி சிறப்பு  வழிபாடுகள்  நடந்தது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் வளர்பிறை ஏகாதசியையொட்டி திருவள்ளுவர் நகர் மங்களாம்பிகை உடனமர் மகேஷ்வரர் கோவிலில், சவுந்தர்ராஜ பெருமாள் கோவில், பஞ்சமுக ஆஞ்சேநேயர் கோவில் ஆகியன உள்ளன. இந்த கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டது. திருவள்ளுவர் நகர், வாசுகி நகர், நடராஜா நகர் உள்ளிட்ட பல பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்றனர். அக்ரஹாரம் லட்சுமிநாராயண சுவாமி கோவிலில் உள்ள பெரிய அளவிலான ஆஞ்சநேயருக்கும், விட்டலபுரி பாண்டுரங்கர் கோவில், ராமர் கோவிலில் உள்ள ஆஞ்சநேயர் சுவாமிகளுக்கும் சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடந்தது. புத்தர் தெரு நடன விநாயகர் கோவிலில் உள்ள ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாற்றப்பட்டு வழிபாடு நடத்தபட்டது. பாலக்கரை அப்புராயர் சத்திரம் பகுதியில், கிருஷ்ணதேவராயர் மன்னரால் வணங்கப்பட்ட ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு அபிஷேக, அலங்கார ஆராதனைகள் நடத்தப்பட்டது. பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags

Next Story